Advertisement


யு.எஸ்., ஓபன்: அரையிறுதியில் வீனஸ்

செப்டம்பர் 06, 2017.
 Comments  
 


US Open Tennis, Venus Williams, Kevin Anderson
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முன்னேறினார்.

நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 37, செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா மோதினர். முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய வீனஸ், இரண்டாவது செட்டை 3–6 எனக் கோட்டைவிட்டார்.  மூன்றாவது செட் ‘டை பிரேக்கர்’ வரை நீடித்தது. இதில் அபாரமாக ஆடிய வீனஸ் 7–6 என வென்றார். முடிவில் வீனஸ் வில்லியம்ஸ் 6–3, 3–6, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் யு.எஸ்., ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய ‘சீனியர்’ வீராங்கனையானார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6–3, 3–6, 7–6 என லாட்வியாவின் அனஸ்டாசிஜா சேவாஸ்டோவாவை வீழ்த்தினார். அரையிறுதியில் வீனஸ், ஸ்டீபன்ஸ் மோத உள்ளனர்.

ஆண்டர்சன் அபாரம்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவின் சாம் குயரே மோதினர். அபாரமாக ஆடிய ஆண்டர்சன் 7–6, 6–7, 6–3, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் பப்லோ காரெனோ பஸ்டா 6–4, 6–4, 6–2 என அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தினார்.

இந்தியா ஏமாற்றம்

பெண்களுக்கான ஜூனியர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகக் ஜெயின், மிஹிகா யாதவ் ஜோடி 3–6, 2–6 என கொலம்பியாவின் சோபியா முனேரா சான்சஸ், புருண்டியின் சடா நஹிமனா ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது.

★ ஆண்களுக்கான ஜூனியர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சித்தாந்த் பந்தியா, ஜப்பானின் ஷினிஜி ஹசாவா ஜோடி 6–7, 6–2, 10–12 என நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங், ரியான் நிஜ்போயர் ஜோடியிடம் வீழ்ந்தது.

பூச்சி தொல்லை

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், லாட்வியாவின் அனஸ்டாசிஜாவை வீழ்த்தினார். பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்லோன் ஸ்டீபன்சை, வண்டு போன்ற பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி பறந்து வந்து தொல்லை கொடுத்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த இவர், தனது ‘ஷூ’வை கொண்டு பூச்சியை விரட்டியடித்து, பேட்டியை தொடர்ந்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?