Advertisement


காம்பிருக்கு ‘சல்யூட்’

செப்டம்பர் 05, 2017.
 Comments  
 


Gautam Gambhir to daughter of Kashmir martyr
 

புதுடில்லி: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காஷ்மீர் போலீசார் மகளின் கல்விச்செலவை ஏற்பதாக காம்பிர் அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் காம்பிர், 35. எல்லையில் தொல்லை தரும் பயங்கரவாத செயல்களுக்கு அடிக்கடி கண்டனம் தெரிவிப்பார். சமீபத்தில், காஷ்மீர் காவல் துறையில் உதவி சப்– இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அப்துல் ரசித் என்பவர், பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த துயரத்தில், இவரது மகள் ஜோக்ரா கதறி அழுத காட்சி மனதை துயரத்தில் ஆழ்த்தியது. இவரின் கல்வி செலவை காம்பிர் ஏற்பதாக அறிவித்துள்ளார்.

கண்ணீர் சிந்தாதே:

இது குறித்து காம்பிர் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ ஜோக்ரா தயவு செய்து கண்ணீர் சிந்தாதே. உன்னுடைய கண்ணீரின் வலியை, பூமித்தாயால் கூட தாங்க முடியாது. உனக்கு துாக்கம் வருவதற்கு எனக்கு தாலாட்ட பாடத்தெரியாது. லட்சியக்கனவுகளை எட்டிப்பிடிக்க உதவ முடியும். உனது கல்விச்செலவு முழுவதையும் ஏற்கிறேன்,’ என, தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஜோக்ரா,‘ நானும், குடும்ப உறுப்பினர்களும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நான் டாக்டராக விரும்புகிறேன்,’ என, தெரிவித்துள்ளார்.

காம்பிரின் இந்த உதவிக்கு சமூகவலைதளத்தில் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?