Advertisement


கால்பந்து: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி *மக்காவ் அணியை சாய்த்தது

செப்டம்பர் 05, 2017.
 Comments  
 


Substitute Balwant Singh scored twice India beat Macau AFC Asian Cup qualifiers
 

மக்காவ்: ஆசிய கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றில், இந்திய அணி, 2–0 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை வீழ்த்தியது. தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

வரும் 2019ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் (ஜன.5– பிப். 1)  ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான மூன்றாவது சுற்று தகுதி போட்டியில், ‘ஏ’ பிரிவில் இந்திய அணி, கிர்கிஸ்தான், மக்காவு, மியான்மர் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா (நம்பர்–96), உலகத் தரவரிசையில் 183வது இடத்தில் உள்ள மக்காவ் அணியை, அதன் சொந்தமண்ணில் சந்தித்தது. 

இதில் வெற்றி பெற்றால், அடுத்த சுற்று நிச்சயம் என்ற நிலையில்,  இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்த போதும், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முதல் பாதி 0–0 என, சமனில் முடிந்தது. 

மீண்டும் அபாரம்:

இரண்டாவது பாதியில் வழக்கம் போல இந்திய அணி எழுச்சி பெற்றது. ஏனெனில், கடைசியாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணி அடித்த 12 கோல்களில், இரண்டாவது பாதியில் தான் 9 கோல்கள் அடிக்கப்பட்டன.

நேற்றும் இந்த அசத்தல் தொடர்ந்தது. போட்டியின் 57 வது நிமிடத்தில், நாராயண் தாஸ் அடித்த பந்தை பெற்ற, பல்வந்த் சிங், தலையால் முட்டி, இந்திய அணிக்கு முதல் கோல் அடித்தார். 

தொடர்ந்து அசத்திய இவர், போட்டியின் 83வது நிமிடத்தில், எதிரணி வீரரிடம் இருந்து பந்தை பறித்து, அப்படியே உதைக்க, அது கோலாக மாறியது. இந்திய அணி 2–0 என. முன்னிலை பெற்றது. 

முடிவில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் இரு போட்டியில் மியான்மர், கிர்கிஸ்தானை வென்ற இந்தியா, இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

பட்டியலில் ‘டாப்’:

இதுவரை 3 லீக் போட்டியில் வென்ற இந்திய அணி, 9 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. வரும் அக்., 10ல் பெங்களூருவில் நடக்கும் நான்காவது போட்டியில், இந்திய அணி, மீண்டும் மக்காவை எதிர்கொள்கிறது.


11

சர்வதேச அரங்கில் கடைசியாக களமிறங்கிய 17 போட்டிகளில், இந்திய அணி பெற்ற 15வது வெற்றி இது. தவிர, கடைசி 11 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாமல் (10 வெற்றி, 1 ‘டிரா’) வலம் வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?