Advertisement


ரூ .16,347 கோடி கொடுக்கும் ஐ.பி.எல்., *பி.சி.சி.ஐ.,க்கு ‘ஜாக்பாட்’

செப்டம்பர் 04, 2017.
 Comments [3]  
 


Star India pays Rs 16,347 crore for IPL media rights
 

  மும்பை: ஐ.பி.எல்., ‘டி.வி’ ஔிபரப்பு மற்றும் இணையதள உரிமத்தை, அடுத்த 5 ஆண்டுக்கு, ரூ. 16,347 கோடி கொடுத்து, ஸ்டார் நிறுவனம் தட்டிச் சென்றது. 

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இதற்கான ‘டிவி’ நேரடி ஔிபரப்பு உரிமத்தை, ஆண்டுக்கு ரூ. 460 கோடி கொடுத்து, சோனி நிறுவனம் வாங்கியது. 

இத்தொடரின் பிரமாண்ட வெற்றியை அடுத்து, இந்தத் தொகை மறுமதிப்பீடு செய்யப்பட, 2009 முதல் ஆண்டுக்கு ரூ. 900 கோடி கொடுத்து வந்தது இந்நிறுவனம். 

இதற்கான 10 ஆண்டு ஒப்பந்தம் முடிந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுக்கு இந்தியாவில் ‘டிவி’ மற்றும் டிஜிட்டல் உரிமம், சர்வதேச சமூக வலைதளங்கள், ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் ஒளிபரப்பு செய்வது 7 பிரிவுகளில் ஏலம் நடந்தது.

மொத்தம் 24 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பிய போதும், 14 நிறுவனங்கள் தான் ஒப்பந்த புள்ளிகளை அனுப்பின. இதில், ஸ்டார், சோனி மட்டுமே இந்திய மார்கெட்டுக்கான ஏலத்தில் பங்கேற்க தகுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டன.

  பின் நடந்த ஏலத்தில் ‘டிவி’ ஒளிபரப்பு உரிமத்தில் ஸ்டார் நிறுவனத்தை விட (ரூ. 6,196 கோடி), சோனி (ரூ. 11,050 கோடி) அதிக தொகைக்கு கேட்டிருந்தது.

ஆனால், ஒட்டுமொத்த ஏலத்தில் ஸ்டார் நிறுவனம் ரூ. 16,347.50 கோடி கொடுக்க முன்வந்தது. இதற்கு முன் கொடுக்கப்பட்டதை விட, இது 158 சதவீதம் அதிகம். அதேநேரம் மற்ற நிறுவனங்கள் அனைத்தும், ஒவ்வொரு பிரிவிலும் கேட்ட அதிகபட்ச தொகையின் ஒட்டுமொத்த தொகையே ரூ. 15,819 தான். 

தவிர, ஸ்டார் நிறுவனம் கேட்ட ஏலத் தொகையை விட, ரூ. 500 கோடி குறைவு என்பதால், 2018 முதல் 2022 வரையிலான ‘டிவி’, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை இந் நிறுவனமே தட்டிச் சென்றது. இதையடுத்து, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 3270 கோடி, ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு ஸ்டார் நிறுவனம் தர வேண்டும். 

மதிப்பு குறையல:

ஆறாவது தொடரில் ஏற்பட்ட சூதாட்டம் காரணமாக ஐ.பி.எல்., தொடருக்கு மவுசு குறைந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் இதன் மதிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.

இதுகுறித்து ஸ்டார் நிறுவன, இந்திய பிரிவு தலைமை அதிகாரி உதய் ஷங்கர் கூறுகையில்,‘‘பி.சி.சி.ஐ., தொடர்பான பல பிரச்னைகள் இருந்தாலும், இந்தியாவில் கிரிக்கெட் பார்ப்பது என்பது வியக்கத்தக்க அனுபவம் தான். இந்த ஏலத்தை பார்க்கும் போது, இந்தியாவில் கிரிக்கெட் என்பது வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. இங்குள்ள மக்களை வெகுவாக ஈர்க்கவும் செய்கிறது,’’ என்றார்.

 

ஒரு போட்டிக்கு ரூ. 55 கோடி

ஐ.பி.எல்., தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் பங்கேற்கும். சராசரியாக ஆண்டுக்கு 60 போட்டிகள் நடக்கும். புதிய ஏலம் காரணமாக, ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 55 கோடி வரை ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு கிடைக்கும். இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச போட்டிக்கு கூட, ரூ. 43 கோடி தான் தரப்படுகிறது.

 

ஒப்பிட முடியாது

உலகின் ‘நம்பர்–1’ உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர் என்ற பெருமையை ஐ.பி.எல்., தக்கவைத்தது. இத்தொடரின் ஒ ளிபரப்பு உரிமம் ஆண்டுக்கு ரூ. 3,270 கோடியாக உள்ளது. இதற்கு அடுத்து ஆண்டுக்கு வெற்றிகரமானது என கூறப்படும் ‘பிக் பாஷ்’ தொடரின் ஆண்டு உரிமை ரூ. 128 கோடி தான்.

 

‘டாப்–4’ இடம்

உலகளவில் பல்வேறு உள்ளூர் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஏலத் தொகையுடன் ஒப்பிடும் போது, உலகளவில் ஐ.பி.எல்., தொடர் நான்காவது இடம் பிடித்தது.

இதன் விவரம்:

தொடர்/போட்டி நடக்கும் இடம் உரிமத்தொகை (கோடியில்)

என்.பி.ஏ.,/கூடைப்பந்து அமெரிக்கா, கனடா 17,000

இ.பி.எல்.,/கால்பந்து இங்கிலாந்து 14,000

என்.எப்.எல்/கால்பந்து அமெரிக்கா 5,300

ஐ.பி.எல்.,/கிரிக்கெட் இந்தியா 3,270

எம்.எல்.பி.,/பேஸ்பால் அமெரிக்கா, கனடா 989

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
cheran perumal nayinar 3 weeks ago | Report abuse
இதில் கணிசமான தொகையை ஜி எஸ் டி வரிவிதிப்பு மூலம் அரசு அடைய வேண்டும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Senthil 3 weeks ago | Report abuse
இந்தியாவில்தான் முட்டாள்கள் அதிகம் உள்ளனர். என்ன செய்வது?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
V. Mani 3 weeks ago | Report abuse
இப்படி ஒவ்வொரு முறையும் பல ஆயிரம், பல லட்சம் கோடிகளில் கிடைக்கும் பணம் யார் வாங்கிக்கணக்குக்கு/சட்டை பாக்கெட்டிற்கு/லாக்கருக்கு செல்கிறது? இப்படி சில தவணைகளில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைத்து இந்தியாவை செல்வ செழிப்புள்ள நாடாக மாற்றலாமே எங்கும் ஊழல், என்ன செய்வது?




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?