Advertisement


மீண்டும் கோபிசந்த் பயிற்சியாளர் ★செய்னா திடீர் முடிவு

செப்டம்பர் 04, 2017.
 Comments  
 


Saina returns to Gopichand Academy
 

புதுடில்லி: இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் மீண்டும் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

இந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், 27. பெங்களூருவில் உள்ள விமல் குமார் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த இவர், சமீபத்தில் கிளாஸ்கோவில் நடந்த உலக பாட்மின்டனில் வெண்கலம் வென்றார். இந்நிலையில் திடீரென தனது பயிற்சியாளரை மாற்றிய செய்னா, மீண்டும் ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து செய்னா கூறியது: மீண்டும் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து அவரிடம் பேசினேன். எனக்கு பயிற்சி அளிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி. பாட்மின்டன் வாழ்க்கையில் இனிவரும் நாட்களில் எனது இலக்கை அடைய உதவுவார் என நம்புகிறேன். எனது சொந்த ஊரான ஐதராபாத்தில் மீண்டும் பயிற்சி மேற்கொள்ள இருப்பது மகிழ்ச்சி.

கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு அளித்த விமல் குமாருக்கு நன்றி. இவரது பயிற்சியின் கீழ், உலக தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்க முடிந்தது. தவிர, இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்ல உதவியாக இருந்தார்.

இவ்வாறு செய்னா கூறினார்.

 

முதன்முறையல்ல...

கடந்த 2011ல் பாஸ்கர் பாபு என்பவரிடம் பயிற்சி மேற்கொண்டு வந்த செய்னா, மூன்றே மாதங்களில் கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார். கோபிசந்த் பயிற்சியின் கீழ் 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்த இவர், 2014ல் டென்மார்க்கில் நடந்த உலக பாட்மின்டனில் காலிறுதியோடு திரும்பினார். இதனையடுத்து கோபிசந்த் அகாடமியில் இருந்து விலகி, பெங்களூருவில் விமல் குமார் அகாடமியில் சேர்ந்தார். தற்போது மீண்டும் கோபிசந்த் அகாடமியில் இணைந்துள்ளார்.


விமல் விளக்கம்

செய்னா விலகியது குறித்து விமல் குமார் கூறுகையில், ‘‘உலக பாட்மின்டன் போட்டிக்கு பின் தாயகம் திரும்பிய செய்னா, இந்தோனேஷிய பயிற்சியாளர் முல்யோவிடம் பயிற்சி மேற்கொள்வது குறித்து என்னிடம் ஆலோசித்தார். இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,), ஒற்றையர் பிரிவில் விளையாடும் இந்திய நட்சத்திரங்களுக்கு பயிற்சி வழங்க முல்யோவை நியமித்துள்ளது. இவர், இந்திய அணி பயிற்சியாளர் கோபிசந்த் நடத்தும் அகாடமியோடு தொடர்புடையவர். எனவே கோபிசந்த் அகாடமில் இணைந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு தெரிவித்தேன். செய்னா விலகியதில் வருத்தம் இல்லை,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?