Advertisement


யு.எஸ்., ஓபன்: சபாஷ் ஷரபோவா

ஆகஸ்ட் 29, 2017.
 Comments  
 


us open tennis sharapova
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரை ஷரபோவா வெற்றியுடன் துவக்கினார். 

நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா (146வது இடம்), ‘நம்பர்–2’ வீராங்கனையான  ருமேனியாவின் சிமோனா ஹாலப்பை சந்தித்தார். 

முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய ஷரபோவா, அடுத்த செட்டை 4–6 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய இவர் 6–3 என வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம் 42 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஷரபோவா 6–4, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

* கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஷரபோவா, 15 மாத தடைக்குப்பின் ஏப்ரல் மாதம் போட்டிக்கு திரும்பினார். இவருக்கு யு.எஸ்., ஓபனில் சிறப்பு அனுமதி கிடைத்ததால் விளையாடி வருகிறார். தவிர, 2016ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபனுக்குப்பின் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். 

* மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஸ்லோனா ஸ்டீபன்ஸ், டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, சுலோவாகியாவின் சிபுல்கோவா, செக் குடியரசின் கிவிட்டோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பெரர் தோல்வி:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் டேவிட் பெரர் 6-4, 3–6, 2–6, 1–6 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் மிகாய்லிடம் போராடி தோல்வியடைந்தார்.

மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், குரோஷியாவின் மரின் சிலிக் உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.


மாறாத ‘ஸ்டைல்’

போட்டியில் பங்கேற்க வந்த ஷரபோவாவுக்கு, ரசிகர்கள் கைதட்டி வரவேற்பு அளித்தனர். இதைப்போல, இவரும் ஆக்ரோஷமாக விளையாடினார். போட்டியில் வென்றதும், சற்று உணர்ச்சிவசப்பட்ட ஷரபோவா, வழக்கம்போல ரசிகர்களை நோக்கி முத்தங்களை பறக்கவிட்டார். கடந்த 2006ல் யு.எஸ்., ஓபனில் இவர் கோப்பை வென்றிருந்தார். அப்போது அணிந்தது போல, இப்போதும் கருப்பு உடை அணிந்து, அதே ‘ஸ்டைலில்’ விளையாடினார்.

 

வீனஸ் ‘20’

அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், 1997ல் முதல் முறைாக யு.எஸ்., ஓபனில் பங்கேற்றார். அப்போது, 17வது வயதில் முதல் சுற்றில் லாட்வியாவின் லாரிசாவை வீழ்த்தினார். இதன் பைனலில் சுவிட்சர்லாந்தின் ஹிங்கிசிடம் வீழ்ந்தார். இம்முறை, முதல் சுற்றில் சுலோவாகியாவின் கஸ்மோவை வீழ்த்திய வீனஸ் (37 வயது), யு.எஸ்., ஓபனில் 20வது ஆண்டை எட்டினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?