Advertisement


சிந்தை எல்லாம் சிந்து!

ஆகஸ்ட் 28, 2017.
 Comments  
 


Sindhu World Badminton Championships
 

கிளாஸ்கோ: உலக பாட்மின்டன் பைனலில் சிந்து வௌிப்படுத்திய ஆக்ரோஷ ஆட்டம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இவர் வெள்ளி வென்றாலும், ஆட்டத்தில் தங்கமாக ஜொலித்தார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்த உலக பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து 19–21, 22–20, 20–22 என ஜப்பானின் ஓகுஹரா நோஜோமியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இது, உலக பாட்மின்டனில் சிந்து வென்ற 3வது பதக்கம்

செய்னா புகழாரம்:

இப்போட்டியில் சிந்துவின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. ஓகுஹராவுக்கு சற்றும் சளைக்காமல் ஆடினார். இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராட ஆட்டம் 110 நிமிடங்கள் வரை நீடித்தது. இதை பார்த்த சக இந்திய வீராங்கனை செய்னாவே அசந்து போனார்.  சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்திடம் செய்னா கூறுகையில்,‘‘அற்புதமான பைனல். இருவரும் மிக நீண்ட நேரம் போராடினர். எனது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது,’’என, நகைச்சுவையாக கூறினார். அதற்கு கோபிசந்த்,’’ஏதாவது ஒரு கட்டத்தில் நின்று தானே ஆக வேண்டும். போட்டியை தொடர முடியாதே,’’என, பதில் அளித்தார். 

பைனல் குறித்து சிந்து கூறியது:

உலக பாட்மின்டனில் தங்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம். மூன்றாவது செட்டில், இருவருக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. வெற்றிக்கு அருகில் சென்று, தங்கப் பதக்கத்தை நழுவவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜப்பானின் நோஜோமியை வீழ்த்துவது எளிதான காரியமல்ல. முன்னதாக இவருக்கு எதிராக விளையாடிய போட்டிகள் அனைத்தும் கடினமாக இருந்தன. எனவே பைனலிலும் இவரை குறைத்து மதிப்பிடவில்லை. இருப்பினும் அன்றைய தினம், எனக்கான நாளாக இல்லாமல் போனதால் தங்கம் வெல்ல முடியவில்லை.

செய்னா வெண்கலம் வென்றதன்மூலம், இம்முறை இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றதன்மூலம் பெருமை கொள்கிறேன். இது, அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு சிந்து கூறினார்.

 

3

கடந்த 2013 (குவாங்சு), 2014 (கோபன்கேகன்) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலம் வென்றிருந்தார். முதன் முறையாக கிளாஸ்கோ போட்டியில் வெள்ளி வென்ற இவர், இத்தொடரில் 3 பதக்கம் கைப்பற்றினார்.

தவிர, கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் சிந்து, வெள்ளி வென்றுள்ளார்.

* மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் (2015ல் வெள்ளி, 2017, வெண்கலம்) வென்றுள்ளார்.

 * ஒட்டுமொத்தமாக கடந்த 1983 முதல் இதுவரை உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 7 பதக்கம் பெற்றுள்ளது.

 

அழுதார்

சிந்துவின் தந்தை பி.வி.ரமணா கூறுகையில்,‘‘ பைனலில் ஓகுஹராவிடம் இருந்து, இதுபோன்ற சவாலை சிந்து எதிர்பார்த்து தான் இருந்தார். முடிவில், தோற்றது ஏமாற்றமாகத் தான் உள்ளது. இருப்பினும், கடைசி புள்ளி வரை சிந்து போராடியது மகிழ்ச்சி. இப்போட்டி முடிந்த பின் சிந்து அழுதார். தோல்விக்காக சிந்து அழுததை முதன் முறையாக பார்த்தேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?