Advertisement


வெள்ளி வென்றார் சிந்து: பைனலில் ஏமாற்றம்

ஆகஸ்ட் 27, 2017.
 Comments [1]  
 


sindhu
 
கிளாஸ்கோ: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன் முறையாக வெள்ளி வென்றார் இந்தியாவின் சிந்து. நேற்று நடந்த பைனலில் போராடி வீழ்ந்தார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்–4’ வீராங்கனை, இந்தியாவின் சிந்து, ‘நம்பர்–10’ வீராங்கனை ஓகுஹரா நோஜோமியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டில் சிந்து 11–5 என, முன்னிலை பெற்ற போதும், ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டார். பந்துகளை வலையிலும், மைதானத்துக்கு வெளியிலும் அடிக்கத் துவங்கினார். 

மறுபக்கம், ரியோ ஒலிம்பிக் அரையிறுதியில் சிந்துவிடம் தோற்றதால், இம்முறை கூடுதல் கவனத்துடன் செயல்பட்ட ஓகுஹரா, முதல் செட்டை 21–19 என, கைப்பற்றினார். 

இரண்டாவது செட்டில் துவக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றார் சிந்து (9–4). ஒரு கட்டத்தில் 20–20 என சென்றது. 38 நிமிட போராட்டத்துக்குப் பின், ஒரு வழியாக இந்த செட்டை சிந்து 22–20 என, வென்றார். வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி, மூன்றாவது செட்டுக்கு சென்றது. இதில் துவக்கத்தில் இருந்து இருவரும் மாறி மாறி புள்ளிகள் பெற, இழுபறி ஏற்பட்டது. இதன் முதல் பாதியில் 11–9 என, முந்தினார் சிந்து. இருப்பினும், இந்த செட்டை 20–22 என, சிந்து இழந்தார். 1 மணி நேரம், 49 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில், சிந்து 19–21, 22–20, 20–22 என்ற கணக்கில் வீழ்ந்து, முதன் முறையாக வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

3

கடந்த 2013 (குவாங்சு), 2014 (கோபன்கேகன்) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலம் வென்றிருந்தார். முதன் முறையாக கிளாஸ்கோ போட்டியில் வெள்ளி வென்ற இவர், இத்தொடரில் 3 பதக்கம் கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல் 2 பதக்கம் (2015ல் வெள்ளி, 2017, வெண்கலம்) வென்றுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
suresh 4 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் சகோதரி.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?