Advertisement


பாட்மின்டன் தரவரிசை: சிந்து ‘நம்பர்–4’

ஆகஸ்ட் 24, 2017.
 Comments  
 


World Badminton Ranking, Sindhu
 

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை சிந்து, 4வது இடத்துக்கு முன்னேறினார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து, 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல், 16வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், 8வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான பிரனாய் (15வது இடம்), அஜய் ஜெயராம் (17வது), சாய் பிரனீத் (19வது), தங்களது இடத்தில் நீடிக்கின்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி 24வது இடத்துக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி 20வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஆண்கள் இரட்டையரில் ‘டாப்–25’ வரிசையில் ஒரு இந்திய ஜோடி கூட இடம் பெறவில்லை.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?