Advertisement


கோப்பை வென்றது இந்தியா!: கண்டி டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி

ஆகஸ்ட் 13, 2017.
 Comments [1]  
 


India, Sri Lanka, Pallekele Test Cricket
 
கண்டி: இலங்கைக்கு எதிரான கண்டி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2–0 என, தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கண்டியில் உள்ள பல்லேகெலே மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 487 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் 135 ரன்னுக்கு சுருண்ட இலங்கை அணிக்கு ‘பாலோ-ஆன்’ வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 19 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே (12), புஷ்பகுமாரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் கருணாரத்னே (16), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார். முகமது ஷமி ‘வேகத்தில்’ புஷ்பகுமாரா (1), குசால் மெண்டிஸ் (12) அவுட்டாகினர். நிதானமாக ஆடிய கேப்டன் சண்டிமால் (36), மாத்யூஸ் (35), டிக்வெல்லா (41) ஆறுதல் தந்தனர். தில்ருவான் பெரேரா (8), சண்டகன் (8) ஏமாற்றினர்.  அஷ்வின் பந்தில் லகிரு குமாரா (10) போல்டானார்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 181 ரன்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பெர்ணான்டோ (4) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 4, ஷமி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி, அன்னிய மண்ணில் முதன்முறையாக 3-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
muthalagu 7 days ago | Report abuse
இந்தியா வெற்றி....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?