Advertisement


நிர்வாகத்திலிருந்து ஓய்வு: லலித் மோடி முடிவு

ஆகஸ்ட் 12, 2017.
 Comments  
 


lalit modi
 

புதுடில்லி: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் லலித் மோடி, நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்றார். 

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) முன்னாள் தலைவர் லலித் மோடி, 53. ஐ.பி.எல்., சேர்மனாக (2008–10) பொறுப்பு வகித்தபோது, நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்திய கிரிக்கெட் போர்டால் (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

தற்போது, லண்டனில் வசித்து வருகிறார். சமீபத்தில், ஆர்.சி.ஏ., தலைவர் தேர்தலில் இவரின் மகன் ருசித் தோல்வியடைந்தார். ஆனால், ராஜஸ்தானில் உள்ள நாகவூர் கிரிக்கெட் சங்கத்தன் தலைவராக மோடி தொடர்ந்தார். இந்நிலையில், கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மோடி பி.சி.சி.ஐ., தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஷிக்கு எழுதியுள்ள கடித விவரம்: எனது நிர்வாகத்தை அடுத்த தலைமுறையிடம் வழங்க இதுதான் சரியான தருணம். தனிப்பட்ட நபரை விட பி.சி.சி.ஐ., கட்டமைப்புதான் முக்கியம். இதனால், கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். நான் பதவி வகித்ததால், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியை பி.சி.சி.ஐ., நிறுத்தி வைத்திருந்தது. இனி முறைப்படி வழங்கப்படும் என நம்புகிறேன்,’’ என்றார். 

லலித் மோடி பதவி வகித்ததால், கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தானில் எந்தவொரு போட்டியும் நடத்தப்படவில்லை. தற்போது, இவர் விலகியுள்ளதால், இயல்பு நிலை திரும்பலாம். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?