Advertisement


உலக சாதனை சமன்

ஆகஸ்ட் 12, 2017.
 Comments  
 


Lokesh Rahul
 

நேற்று 85 ரன்கள் எடுத்த லோகேஷ் ராகுல், டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து 7 அரைசதங்கள் (90, 51, 67, 60, 51, 57, 85) அடித்து, உலக சாதனையை சமன் செய்தார்.

இதற்கு முன், எவர்டன் வீக்ஸ் (வெ. இண்டீஸ்), ஆன்டி பிளவர் (ஜிம்பாப்வே), சந்தர்பால் (வெ. இண்டீஸ்), சங்ககரா (இலங்கை), கிறிஸ் ரோஜர்ஸ் (ஆஸி.,) என, 5 பேர் இது போல 7 அரை சதம் அடித்தனர்.

* இந்திய அளவில், இவ்வரிசையில் டிராவிட் (6), குண்டப்பா விஸ்வநாத்தை (6) முந்தி முதலிடம் பிடித்தார் ராகுல்.

* கவாஸ்கர், வெங்சர்க்கார், மஞ்ச்ரேக்கர், சித்து தலா 5 முறை, தொடர்ந்து அரைசதங்கள் அடித்தனர். 

கங்குலியை முந்தினார்

இந்திய அணியின் கங்குலி, கேப்டனாக களமிறங்கிய முதல் 28 டெஸ்டில், 11 பேர் கொண்ட அணியில், தொடர்ந்து மாற்றங்கள் இருந்தன.

இதை முந்தினார் கோஹ்லி. அதாவது, நேற்று 29 வது டெஸ்டில், கேப்டனாக களம் புகுந்த கோஹ்லியின், அனைத்து அணியிலும் மாற்றங்கள் இருந்தன. 

* இது தவிர, கடந்த 2014, ஜூலை 27ல் இங்கிலாந்துக்கு எதிரான சவுத்தாம்டன் டெஸ்டில் இருந்து, இதுவரை இந்திய அணி பங்கேற்ற 34 டெஸ்ட் போட்டியிலும் விளையாடிய ‘லெவன்’ அணியில் மாற்றங்கள் இருந்தன.

1

இலங்கை மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமை இந்தியாவின் தவான், ராகுலுக்கு (188) கிடைத்தது. 

இதற்கு முன் 1993ல் மனோஜ் பிரபாகர், சித்து ஜோடி, 171 ரன்கள் (கொழும்பு) எடுத்தது தான் அதிகம்.

3

இலங்கையில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் சேவக், புஜாராவுடன் இணைந்து இரண்டாவது இடம் பெற்றார் தவான். இவர்கள், தலா 3 சதம் அடித்தனர். இவ்வரிசையில் சச்சின் (5 சதம்) முதலிடத்தில் உள்ளார்.

13

கடந்த 2004ல் பால் ஆடம்ஸ் (தெ.ஆப்.,), டேவ் முகமது (வெ.இண்டீஸ்), என, இரு ‘சைனாமேன்’ பவுலர்கள், கேப்டவுன் டெஸ்டில் எதிரெதிராக களமிறங்கினர். 13 ஆண்டுக்குப் பின், தற்போது கண்டி டெஸ்டில் குல்தீப் யாதவ் (இந்தியா), சந்தகன் (இலங்கை) என, இரு ‘சைனாமேன்’ பவுலர்கள் விளையாடுகின்றனர்.

குறைந்த ரன் வேகம்

நேற்று இந்திய அணி முதல் 45 ஓவரில், 25 பவுண்டரிகள் உட்பட 211/1 ரன்கள் குவித்தது. இதன் பின் ரன்வேகம் குறைந்தது. அடுத்த 45 ஓவரில், 5 பவுண்டரிகள் மட்டும் இந்தியா சார்பில் அடிக்கப்பட, 118/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?