Advertisement


சதம் விளாசினார் ஷிகர் தவான்: இந்திய அணி ரன் குவிப்பு

ஆகஸ்ட் 12, 2017.
 Comments  
 


kandy test india vs sri lanka
 

கண்டி: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், ஷிகர் தவான் சதம் விளாசினார். லோகேஷ் ராகுலின் அரைசதமும் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2–0 என, தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், கண்டியில் உள்ள பல்லேகெலே மைதானத்தில் நேற்று துவங்கியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, வழக்கம் போல ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

குல்தீப் வாய்ப்பு:

இந்திய அணியில் ஜடேஜாவுக்குப் பதில் ‘சைனாமேன்’ பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் காயமடைந்த ஹெராத், பிரதீப் மற்றும் தனஞ்செய டிசில்வாவுக்குப் பதில் ‘சைனாமேன்’ பவுலர் லக்சன் சந்தகன், லகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டனர்.

நல்ல துவக்கம்:

இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. தவான் 1 ரன், ராகுல் 28 ரன் எடுத்த போது, ‘கேட்ச்’ வாய்ப்பில் இருந்து தப்பினர். வாய்ப்பை பயன்படுத்திய தவான், வேகமாக ரன்கள் சேர்த்தார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த ராகுல், தன் பங்கிற்கு 9வது அரைசதம் கடந்தார்.

தவான் அபாரம்:

முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில், சிக்சருக்கு ஆசைப்பட்ட ராகுல் (85) அவுட்டானார். மறுமுனையில், சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த தவான், புஷ்பகுமாரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, டெஸ்ட் அரங்கில் 6வது சதம் அடித்தார். இவர், 123 பந்தில் 119 ரன்கள் எடுத்து திரும்பினார்.

கோஹ்லி ஏமாற்றம்:

அடுத்த சில நிமிடத்தில் புஜாரா (8) அவுட்டாக, சிறிது நேரத்தில்  ரகானே (17), புஷ்பகுமாரா ‘சுழலில்’ போல்டானார். சற்று தாக்குப்பிடித்த கோஹ்லி, 42 ரன் எடுத்தார். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 188 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்து 108 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அஷ்வினும் (31) நிலைக்கவில்லை.

முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. சகா (13), பாண்ட்யா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுக்கும் பட்சத்தில், கண்டி டெஸ்டில் தொடர்ந்து கலக்கலாம்.

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?