Advertisement


காரைக்குடி கம்பீர வெற்றி

ஆகஸ்ட் 11, 2017.
 Comments  
 


karaikudi kaalai team
 

திண்டுக்கல்: திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அனிருதா ஸ்ரீகாந்த் அரைசதம் கடந்து கைகொடுக்க, காரைக்குடி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் 2வது சீசன் நடக்கிறது. நேற்று, திண்டுக்கல் மாவட்டம், நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் திருச்சி, காரைக்குடி அணிகள் மோதின.

சங்கர் சதம்:

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த திருச்சி அணிக்கு கேப்டன் பாபா இந்திரஜித் (2) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய பரத் சங்கர்,  63 பந்தில் சதம் கடந்தார். திருச்சி அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. பரத் சங்கர் (112 ரன், 68 பந்து, 7 சிக்சர், 10 பவுண்டரி), அக்கில் ஸ்ரீநாத் (37) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய காரைக்குடி அணிக்கு விஷால் (40 ரன், 19 பந்து) நல்ல துவக்கம் தந்தார். கேப்டன் பத்ரிநாத் (10), ஆதித்யா (16) ஏமாற்றினர்.  அனிருதா ஸ்ரீகாந்த் (60) கைகொடுத்தார். பின் இணைந்த ஷாஜகான் (39★), கணபதி (20★) ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. காரைக்குடி அணி, 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது, டி.என்.பி.எல்., வரலாற்றில் பதிவான சிறந்த ‘சேஸ்’.

112

திருச்சி அணியின் பரத் சங்கர் (112), இந்த சீசனில் சதமடித்த 2வது வீரரானார். ஏற்கனவே துாத்துக்குடி அணியின் வாஷிங்டன் சுந்தர் (107 ரன், எதிர்– சேப்பாக்கம்) சதமடித்திருந்தார்.

★ தவிர, இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் பரத் சங்கர்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?