Advertisement


சரித்திரம் படைக்குமா இந்திய அணி: இன்று 3வது டெஸ்ட் துவக்கம்

ஆகஸ்ட் 11, 2017.
 Comments  
 


kohli
 

கண்டி: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அசத்தும்பட்சத்தில், அன்னிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை 3–0 என வென்று சரித்திர சாதனை படைக்கலாம்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2–0 என, தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், கண்டியில் உள்ள பல்லேகெலே மைதானத்தில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா வெல்லும் பட்சத்தில் புதிய சாதனை படைக்கலாம்.

அதாவது, இந்திய அணி கடந்த 1932 ல் டெஸ்ட் அரங்கில் கால் பதித்தது. சொந்த மண்ணில் பல முறை எதிரணிகளை முற்றிலும் வீழ்த்திய போதும், 85 ஆண்டு கால இந்திய டெஸ்ட் வரலாற்றில், அன்னிய மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை, ஒருமுறை கூட முழுமையாக வென்றதில்லை. 

இம்முறை புதிய சாதனைக்கான வாய்ப்பு கனிந்து வந்துள்ளது. இதற்கு,  காலே டெஸ்டில் மிரட்டிய ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ‘மிடில் ஆர்டரில்’ இலங்கை மண்ணில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த புஜாரா  என, பலர் கைகொடுக்கலாம். தவிர, கேப்டன் கோஹ்லி, ரகானே, அஷ்வின், சகா என, பலரும் நல்ல பார்மில் உள்ளதால், ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைப்பது சிக்கல் தான்.

குழப்பும் பவுலிங்:

பவுலிங்கில் ஜடேஜா தடை காரணமாக, ‘சுழல்’ வீரர் அஷ்வினுடன் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் வாய்ப்பு பெறலாம். ஆனால், ஆடுகளத்தின் தன்மை காரணமாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக, பேட்டிங்கிலும் கைகொடுக்கும் புவனேஷ்வர் குமார் இடம் பெறுவார் என நம்பப்படுகிறது. உமேஷ் யாதவ், முகமது ஷமி கூட்டணியில் மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது. 

பேட்டிங் எழுச்சி:

இலங்கை அணி முதல் இரு டெஸ்டில் சுமாரான பேட்டிங்கை வெ ளிப்படுத்தியது. இருப்பினும், ‘பாலோ–ஆன்’ பெற்ற பின் அணியின் பேட்டிங் எழுச்சி பெற்றது. துவக்க வீரர் தரங்கா ஏமாற்றினாலும், குசல் மெண்டிஸ், கருணாரத்னே சதம் விளாசினார். இதுபோல, டிக்வெல்லா, மாத்யூஸ், கேப்டன் சண்டிமால் இம்முறை போராட்டத்தை வௌிப்படுத்தலாம்.

பவுலிங்கில் ‘சீனியர்’ ஹெராத்துக்கு ஓய்வு தரப்பட்டதால், புஷ்பகுமாரா, தில்ருவன் ஜோடிக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. மற்றபடி, பிரதீப் இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சாளர் லகிரு கமாகே அறிமுக வாய்ப்பு பெறலாம்.

29

இதுவரை 28 டெஸ்டில், கோஹ்லி கேப்டனாக களமிறங்கியுள்ளார். இந்த அனைத்து போட்டிகளிலும் களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்தன.

இன்று 29 வது டெஸ்டிலும், ஜடேஜா தடை காரணமாக, மீண்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

மழை எப்படி

பூமியின் ஈரப்பதமான பகுதிகளில் கண்டி, பல்லேகெலே பகுதியும் ஒன்று. இதனால், மூன்றாவது டெஸ்ட், அவ்வப்போது மழையால் தடை படும். இன்று மதியம் 2:30 மணிக்கு பின் மழை வர 78 சதவீதமும்,  நாளை இடியுடன் கூடிய மழை வர 93 சதவீதமும் வாய்ப்பு உள்ளது.

‘வேகங்கள்’ ஜாலி

பல்லேகெலே ஆடுகளம் வழக்கமாக வேகங்களுக்கு சாதகமாக இருக்கும். இம்முறையும் ஆடுகளத்தில் புற்கள் சற்று அதிகமாக இருப்பதால், முதல் இரு நாட்கள் ‘வேகங்களுக்கு’ ஜாலி தான்.

அதேநேரம், இம்மைதானத்தில் குசல் மெண்டிஸ் (176), யூனிஸ் கான் (171) என, இருவரும் நான்காவது இன்னிங்சில் தான் அதிக பட்ச ரன்கள் எடுத்தனர். இதனால், அடுத்தடுத்த நாட்களில் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறலாம்.

முடிவு நிச்சயம்

இலங்கை மண்ணில் கடைசியாக நடந்த 18 டெஸ்ட் போட்டிகளில், ஒன்று கூட ‘டிரா’ ஆனது கிடையாது. அனைத்திலும் முடிவு கிடைத்துள்ளன.

வருகிறார் குல்தீப்

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ குல்தீப் யாதவ் எப்படிப்பட்ட சூழலிலும், எந்த நேரத்திலும் பந்தை சுழற்ற தயாராக உள்ளார். தன் திறமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். சுழலுக்கு சாதகமாக இல்லாத தரம்சாலா மைதானத்தில் தன்னை நிரூபித்தார். இன்று, ஜடேஜாவுக்குப் பதில் குல்தீப் விளையாட அதிக வாய்ப்புள்ளது,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?