Advertisement


கடவுளுக்கும் மேலானதா பி.சி.சி.ஐ.,: ஸ்ரீசாந்த் காட்டம்

ஆகஸ்ட் 11, 2017.
 Comments [11]  
 


sreesanth
 

புதுடில்லி: வாழ்நாள் தடையை நீக்க மறுக்கும் பி.சி.சி.ஐ., கடவுளுக்கும் மேலானதா என ஸ்ரீசாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். 

ஐ.பி.எல்., சூதாட்டத்தில் (2013) சிக்கிய இந்தியாவின் ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. இவர்களை  டில்லி நீதிமன்றம் விடுவித்தது. சமீபத்தில், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கும்படி பி.சி.சி.ஐ.,க்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பி.சி.சி.ஐ., கேரள நீதிமன்றத்தில் ‘அப்பீல்’ செய்துள்ளது. 

இது குறித்து ஸ்ரீசாந்த் தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ பி.சி.சி.ஐ., நிர்வாகத்திடம் நான் பிச்சை கேட்கவில்லை. எனது வாழ்வாதாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். இது எனது உரிமைதான். நீங்கள் ஒன்றும் கடவுளுக்கும் மேலானவர்கள் அல்ல. குற்றச்சாட்டை நீக்கியபின்பும், தொடர்ந்து எனக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள். ஊழல் மற்றும் சூதாட்டத்திற்கு எதிரான நிர்வாகம் என்றால், சென்னை, ராஜஸ்தான் அணிகள் தொடரில் மீண்டும் பங்கேற்பதில் உங்கள் நிலை என்ன,’ என, காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Jevee one week ago | Report abuse
எய்யா ஸ்ரீசாந்த், நீ கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையா பொய்யா?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
adithyan one week ago | Report abuse
இவன் ஒரு சூதாடி. இவன் சூதாட்டத்தை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமாம். இவன் சூதாட்டத்தில் சம்பாதிப்பானாம். மற்றவர்கள் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Sumanthanan one week ago | Report abuse
ஐயா நீங்க சூது ஆடினீர்களா இல்லையா ? சூது ஆடுன நல்ல ஆடுங்க மத்தவங்களு கிரிக்கெட் ஆட வழி விடுங்க நிறையபேர் கிரிக்கெட் ஆடுற வாய்ப்புக்காக காத்துகிட்டு இருக்காங்க.. அன்பா வழி விடுங்க :)


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   4  
K. N. Krishna Moorthy one week ago | Report abuse
ஸ்ரீசாந்த், நீங்கள் சொல்வது மிகவும் சரி. பிசிசிஐ எப்போதும் ஒரு பிக் பிரதர் போல தான் நடந்து கொள்கிறது. வேண்டும் என்றால் சகல வசதிகளும் செய்து தரப்படும். இல்லை என்றால் முகத்தில் அடிக்கப்படும். நான் உங்களை ஆதரிக்கிறேன்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
8   1  
ANANDHAKRISHNAN one week ago | Report abuse
உங்களுக்கு கோபம் வரவே கூடாது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட உங்களை ஆயுள் தண்டனையே கொடுக்கலாம் .,வாழ்நாள் தடை கொடுத்தது குறைந்த தண்டனைதான் .,குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருக்கும் நீங்கள் திருந்தவே வாய்ப்பில்லை ....


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
10   1  
Kalyanaraman one week ago | Report abuse
தப்பும் செய்து விட்டு இப்போது பேச இவருக்கு அசிங்கமாக இல்லை.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
9   0  
venkatesan Gananathan 2 weeks ago | Report abuse
ஆம் உண்மையும் நேர்மையும் கடவுளுக்கு நிகரானவை


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
9   2  
sam 2 weeks ago | Report abuse
இந்த ஆள் பண்ணின சூதாட்டத்தை யார் மறக்கிறார்களோ, மக்கள் மறக்க வில்லை. உண்மையான வர்களுக்கு மட்டும் தான் கடவுள் துணை இருப்பார். குறுக்கு வழியில் எப்படி வந்தாலும் கடவுள் காப்பாற்ற மாட்டார்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
38   2  
ஜெய்ஹிந்த்புரம் 2 weeks ago | Report abuse
அப்போ தனியா கோவிலில் விளையாடலாமே..


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
11   2  
LAX 2 weeks ago | Report abuse
ஏண்டா டேய் மீண்டும் கை 'அரிப்பெடுக்கிறதா'..?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   2  
Jevee 2 weeks ago | Report abuse
BCCI நிஜம், கடவுள் கற்பனை




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?