Advertisement


‘யூத்’ கிரிக்கெட்: இந்தியா வெற்றி

ஆகஸ்ட் 10, 2017.
 Comments  
 


Anukul Roy
 

கார்டிப்: இரண்டாவது யூத் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, ஐந்து யூத் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1–0 என, முன்னிலையில் இருந்தது. இரண்டாவது போட்டி கான்டர்பெர்ரியில் நடந்தது.

‘டாஸ்’ வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டிரிவாஸ்கிஸ் (35), பாங்க்ஸ் (23), கேப்டன் புரூக் (21), ஜாக்ஸ் (21) தவிர, மற்றவர்கள் சொதப்பினர். இங்கிலாந்து அணி 44.4 ஓவரில், 175 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சார்பில் அனுகுல் ராய் 4, ராகுல் சாகர் 3, அபிஷேக் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஹிமான்சு அபாரம்:

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் பிரித்வி ஷா, ஹிமான்சு ராணா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்த போது, பிரித்வி ஷா (48) அரைசத வாய்ப்பை இழந்து கிளம்பினார். ஹிமான்சு 74 ரன்கள் எடுத்தார். பின் இணைந்த ஷப்மன் கில் (38), அபிஷேக் சர்மா (0 ஜோடி, அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது. இந்திய அணி 33.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து, கலக்கல் வெற்றி பெற்றது. இதையடுத்து யூத் ஒருநாள் தொடரில் இந்திய அணி 2–0 என, முன்னிலை பெற்றது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?