Advertisement


கால்பந்து தரவரிசை: இந்தியா ‘நம்பர்–97’

ஆகஸ்ட் 10, 2017.
 Comments  
 


fifa soccer
 

புதுடில்லி: ‘பிபா’ கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 97வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரேசில் அணி, ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) வெளியிட்டது. இதில் இந்திய அணி, 341 புள்ளிகளுடன் 96வது இடத்தில் இருந்து 97வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 12வது இடத்தில் உள்ளது. ஈரான், முதலிடத்தில் உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ‘கான்ககப்’ தங்கக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி வரை முன்னேறிய கனடா, 5 இடங்கள் முன்னேறி 95வது இடம் பிடித்தது. பிரேசில் அணி, 1604 புள்ளிளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.

நடப்பு ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி (1549 புள்ளி), இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அர்ஜென்டினா (1399),மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சுவிட்சர்லாந்து (4வது இடம்), போலந்து (5வது) அணிகள் தலா ஒரு இடம் முன்னேறின. போர்ச்சுகல் அணி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?