Advertisement


அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

ஆகஸ்ட் 10, 2017.
 Comments  
 


ashwin, jadeja
 

கண்டி: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ தொடருக்கான இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு தரப்படும் எனத்தெரிகிறது. 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், இந்தியா 2–0 என தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது. நாளை பல்லேகெலேயில் கடைசி டெஸ்ட் துவங்க உள்ளது. இதன்பின், இரு அணிகளும் 5 ஒரு நாள், ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் ஒரு நாள் போட்டி தம்புலாவில் வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது. 

இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு வரும் 13ல் நடக்கிறது. தற்போது, இலங்கையில் உள்ள இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ‘வீடியோ கான்பரன்சில்’ மற்ற உறுப்பினர்களுடன் விவாதிக்க உள்ளார். 

வருவாரா அக்சர்:

இதில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு தரப்படும் எனத்தெரிகிறது. இலங்கை டெஸ்ட் தொடரில் அஷ்வின், ஜடேஜா முறையே 108.3, 108.2 ஓவர்கள் வீசினர். இந்த நிலையில், வீரர்களின் ஒழுக்கவிதிமுறையை மீறிய ஜடேஜாவும் 3வது டெஸ்டில் விளையாட மாட்டார். இதனால், அஷ்வினுக்கு சுமை அதிகமாகும். இவர்களுக்குப்பதில் ஒரு நாள் தொடரில் இளம் ‘சுழல்’ வீரர்களான யுவேந்திரா சாகல், அக்சர் படேல், குர்னால் பாண்ட்யா இடம்பிடிக்கலாம். 

‘வேகத்தில்’ ஷமிக்கு ஓய்வு தரப்படவும் வாய்ப்புள்ளது. இதைப்போல, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என கேப்டன் கோஹ்லி தொடர்ந்து விளையாடி வருகிறார். எதிர் வரும் மாதங்களில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுடன் மோத வேண்டிய நிலை உள்ளது. இந்த காரணத்தால், கோஹ்லிக்கு ஓய்வு தரப்படலாம் என கூறப்படுகிறது. 

கோஹ்லி தரிசனம்:

நேற்று, இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனையடுத்து, இலங்கையின் நுவேரா எலியா நகரிலிருந்து சுமார் 5 கி.மீ., தொலைவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு கேப்டன் கோஹ்லி, உமேஷ், இஷாந்த் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?