Advertisement


காலிறுதியில் போபண்ணா ஜோடி

ஆகஸ்ட் 10, 2017.
 Comments  
 


Rogers Cup Tennis, Rohan Bopanna, Federer, Nadal
 

மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி முன்னேறியது.

கனடாவின் மான்ட்ரியல் நகரில், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடிக்கு ‘பை‘ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடிய போண்ணா, டோடிக் ஜோடி, ரஷ்யாவின் கரென் கசனோவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஜோடியை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய போபண்ணா ஜோடி 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

பெடரர் வெற்றி: ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் பீட்டர் போலன்ஸ்கியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?