Advertisement


ரியல் மாட்ரிட் மீண்டும் சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்...

ஆகஸ்ட் 09, 2017.
 Comments  
 


Super Cup Soccer, Real Madrid, Manchester United
 

ஸ்கோப்ஜி: சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மாசிடோனியாவில், சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இதில் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் நடப்பு சாம்பியன்களான முறையே ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

அபாரமாக ஆடிய ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது. ரியல் மாட்ரிட் சார்பில் கேஸ்மிரோ (24வது நிமிடம்), இஸ்கோ (52வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு லுகாகு (62வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி, நான்காவது முறையாக (2002, 2014, 2016, 2017) சூப்பர் கோப்பை வென்றது. பார்சிலோனா (ஸ்பெயின், 1992, 1997, 2009, 2011, 2015), மிலன் (இத்தாலி, 1989, 1990, 1994, 2003, 2007) அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சூப்பர் கோப்பை வென்றுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?