Advertisement


கூட்டணி மாற்றம் சரியா

ஆகஸ்ட் 07, 2017.
 Comments  
 


india tennis sania mirza
 

டென்னிஸ் அரங்கில் அடிக்கடி கூட்டணியை  மாற்றுகிறார் சானியா மிர்சா.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. கடந்த 2015ல் சுவிட்சர்லாந்தின் ஹிங்சுடன் இணைந்து, பெண்கள் இரட்டையர் உலகில் அசத்தினார். 16 மாதத்தில் 14 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது

இவர்கள், உலகின் ‘நம்பர்–1’ ஜோடியாக வலம் வந்தனர். யார் கண் பட்டதோ, இருவரும் பிரிந்தனர். 2016, ஆக., முதல் 2017, ஏப்., வரை ஸ்டைரிகோவாவுடன் விளையாடினார்.

பின் சானியா, 2017 மே முதல் ஷிவ்தோவாவுடன் சேர்ந்தார். இவருக்கு காயம் ஏற்பட, விம்பிள்டனில் பிலிப்கென்சுடன் இணைந்து, தோற்றார்.

தற்போது சீனாவின் ஷுவாய் பெங்குடன் சேர முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து சானியா அளித்த பேட்டி:

* புதிய ஜோடி குறித்து எப்போது முடிவெடுத்தீர்கள்?

விம்பிள்டன் தொடரின் போது முடிவெடுத்தோம். முன்னாள் ‘நம்பர்–1’ வீராங்கனையான ஷுவாய் பெங்குடன் இணைந்து சிறப்பாக செயல்பட முடியும்  என நம்புகிறேன்.

* ஹிங்கிஸ் போல இனி வருமா?

ஹிங்கிசுடன் இணைந்து பெற்ற வெற்றிகள் போல இனி  மீண்டும் பெற முடியாது. எந்த ஒரு பார்ட்னர்ஷிப்புக்கும் குறிப்பிட்ட காலம் உள்ளது. பின் மாற்றம் வந்து விடும்.

* இந்திய நட்சத்திரங்கள் இரட்டையர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்களே?

என்னைப் பொறுத்தவரையில் 8 ஆண்டு ஒற்றையரில் விளையாடினேன். பின் அடுத்தடுத்து செய்த 3 ஆப்பரேஷன் காரணமாக இரட்டையர் பிரிவுக்கு மாறினேன். மற்றவர்கள் குறித்து பேச விரும்பவில்லை.

*ஒற்றையர் பிரிவில் இந்தியா முன்னேறுவது எப்போது?

‘டாப்–100’ பட்டியலில் இந்திய நட்சத்திரங்கள் அதிகம் இடம் பெற வேண்டும். இதற்காக ‘சிஸ்டத்தில்’ மாற்றம் கொண்டு வர வேண்டும்.

* ஐதராபாத்தில் இருந்து நிறைய சாம்பியன்கள் வருகிறார்களே?

ஐதராபாத்தில் இருந்து சானியா, செய்னா, சிந்து வரிசையில் தற்போது மிதாலி ராஜ் (பூர்விகம் தமிழகம்) வந்துள்ளார். நாங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், இந்நகரத்தில் நிறைய விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?