Advertisement


கபடி பிடியில் கிரிக்கெட்

ஆகஸ்ட் 07, 2017.
 Comments  
 


pro kabaddi league cricket india
 

புரோ கபடி தொடரின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், கிரிக்கெட்டை கபடி மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டு கபடி. நான்காயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில் தோன்றியதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் பிரபலமான இந்த விளையாட்டு, தற்போது நகரங்களிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்து, பின்னிப் பிணைந்து இருப்பதால் தான், இப்போட்டியில் உலகளவில் இந்தியாவை அடித்துக் கொள்ள ஆளில்லை .

ஆசிய விளையாட்டில் 1990 முதல் 2014 வரை என, தொடர்ந்து 7 தங்கம், தெற்காசிய விளையாட்டில் 3 தங்கம், உலக கோப்பையில் 2004, 2007, 2016 என, ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது இந்தியா. இருப்பினும், கபடி வீரர்களை மீடியா, ரசிகர்கள் கண்டு கொள்ளாத நிலை தான் இருந்தது. 

மாறிய நிலைமை:

கடந்த 2014ல் புரோ கபடி லீக் துவங்கப்பட்ட பின் நிலைமை தலைகீழானது. ஏராளமான ரசிகர்கள் கபடியின் பக்கம் திரும்பினர்.

முதல் 4 சீசன்களில் 8 ஆக இருந்த அணிகளின் எண்ணிக்கை, இம்முறை தமிழகத்தின் ‘தமிழ் தலைவாஸ்’, ஹரியானா, குஜராத், உ.பி., என, 4 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 12 ஆக உயர்த்தப்பட்டன.

எகிறிய பார்வையாளர்கள்:

2014ல் இருந்து இதுவரை இத்தொடரை பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 51 சதவீதம் அதிகரித்துள்ளது. ‘டிவி’ பார்வையாளர்களுடன் ஒப்பிடும் போது, கிரிக்கெட்டை (2016 ஐ.பி.எல்., தொடர் பார்த்தது 82 கோடி பேர்) நெருங்க முடியாது தான். இருப்பினும், நான்காவது சீசன் போட்டிகளை பார்த்தவர்களின் சராசரி 1 கோடியை எட்டியது.

நேரடி ஔிபரப்பு செய்யப்பட்ட போட்டிகளில், கடந்த ஆண்டு கிரிக்கெட் தவிர்த்து, மற்ற போட்டிகளை 20 சதவீதம் பேர் பார்த்துள்ளனர்.

கபடிக்கு முதலிடம்:

இதில் அதிகமாக பார்க்கப்பட்டது கபடி தான். அதாவது புரோ கபடி (61 சதவீதம்), கபடி உலக கோப்பை (10%) என, இப்போட்டி மட்டும் சுமார் 71 சதவீத பார்வையாளர்களை பெற்றது.

பண மழை:

வீரர்களுக்கான சம்பள விஷயத்தில், கபடியை பொறுத்தவரையில், 2014ல் அதிகபட்ச ஏலமாக ராகேஷ் குமார் ரூ. 12.8 லட்சத்துக்கு (பாட்னா) வாங்கப்பட்டார்.

இம்முறை நடந்த ஏலத்தில் நிடின் தோமருக்கு  ரூ. 93 லட்சம் தரப்பட்டது. இது, 2014 ல் கொடுத்ததை விட 626 மடங்கு அதிகம்.  

ஒட்டுமொத்தமாக பார்த்தால், கிரிக்கெட்டுக்கு அடுத்த பிரபல விளையாட்டாக கபடி உருவெடுத்துள்ளது. மிக விரைவில் கிரிக்கெட்டுக்கு நிகராக ரசிகர்களின் ஆதரவை பெறும் என நம்பப்படுகிறது.


ஒலிம்பிக் கனவில்...

இந்தியா, மும்பை அணி கேப்டன் அனுப் குமார் கூறுகையில்,‘‘ ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்பட வேண்டும் என்பது கனவாக உள்ளது. இது நடந்தால், இந்தியாவுக்கு எப்படியும் ஒரு பதக்கம் கிடைக்கும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?