Advertisement


நிறைவேறிய கனவு

ஜூலை 30, 2017.
 Comments  
 


Anya Shrubsole
 

‘லார்ட்ஸ் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் பைனலில் விளையாட வேண்டும்,’ என்று கனவு கண்ட ஸ்ரப்சோல், கடைசியில் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு உலக கோப்பை வென்று கொடுத்து அசத்தினார்.

சமீபத்தில் பெண்கள் உலக கோப்பை தொடரின் பைனல், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கியவர் வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஸ்ரப்சோல், 25. இவரது தந்தை இயான். இவரும் கிரிக்கெட் வீரர் தான். உலக கோப்பை பைனல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு ‘டுவிட்டர்’ செய்தி, போட்டோ வௌியிட்டார்.

இதில்,கடந்த 2001ல், ஸ்ரப்சோல் லார்ட்ஸ் மைதானத்தின் காலரியில் நின்று, தனது தந்தை கிளப் அணிக்காக விளையாடுவதைப் பார்த்துக் கொண்டுள்ளார். இந்த போட்டோவுக்கு கீழே கொடுக்கப்பட்ட வாசகத்தில், ஸ்ரப்சோல் சொல்வது போல,‘ என்ன ஒரு அழகான மைதானம், இங்கு எப்படியும் நான் விளையாட வேண்டும், அதுவும், இங்கிலாந்து அணிக்காக... உலக கோப்பை தொடரின் பைனலில் களமிறங்கி வேண்டும்,’ என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது 16 ஆண்டுகள் கழித்து ஸ்ரப்சோல் கனவு நிறைவேறியது. இந்தியாவுக்கு எதிராக, உலக கோப்பை தொடரின் பைனலில் களமிறங்கினார். அதுமட்டுமன்றி, இந்திய அணி வெற்றி பெற இருந்த நேரத்தில், தனது சூப்பரான பந்து வீச்சினால் 6 விக்கெட் வீழ்த்தி, இங்கிலாந்து அணி உலக கோப்பை வெல்ல கைகொடுத்தார்.

இதுகுறித்து ஸ்ரப்சோல் கூறுகையில்,‘ லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி உலக கோப்பை வெல்ல நீதான் கைகொடுக்கப் போகிறாய் என, யாராவது வந்து என்னிடம் சொல்லியிருந்தால், சிரித்து இருப்பேன். ஏனெனில், அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என, ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டேன். தற்போது, எனது அப்பா வௌியிட்ட ‘டுவிட்டர்’ படம் மிக பிரபலம் ஆகிவிட்டது,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?