Advertisement


வேட்டிய கட்டிக்கிட்டு...கிரிக்கெட் ஆடிக்கிட்டு! *மதுரையில் ஹைடன் உற்சாகம்

ஜூலை 17, 2017.
 Comments  
 


matthew hayden india tamil nadu premier league
 

மதுரை: ‘‘இளைஞர்கள் கிரிக்கெட்டை தான் அதிகம் காதலிக்கின்றனர்,’’ என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன் பேசினார்.

மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்த மாணவர்கள் கலந்துரையாடலில், அவர் பேசியதாவது:

தமிழகத்தில், கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்கள் உள்ளனர். அவர்களது திறமையை வெளிக்கொண்டுவர உரிய இடம் மற்றும் வழிகாட்டிகள் இல்லை. இளைஞர்களின் பிரச்னையை களைந்து, கிரிக்கெட்டில் ஆவலை துாண்டுவதற்காகவே, டி.என்.பி.எல்., போட்டிகளை நடத்தி, சிறந்த கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டுவருகிறோம். தமிழகத்திற்கு 2 வது முறையாக வந்துள்ளேன்.  இளைஞர்கள் கிரிக்கெட்டை அதிகளவில் காதலிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகளிடம்  பலதிறமைகள் குவிந்து கிடக்கின்றன. அறிவில் சிறந்துவிளங்குகின்றனர்.  இவர்களை நல்வழிப்படுத்தினால், நாடு விளையாட்டில் மட்டுமின்றி, பல துறைகளில் சிறப்பான முன்னேற்றம் காணும்.

இவ்வாறு ஹைடன் பேசினார்

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?