Advertisement


இலங்கை சாதனை வெற்றி

ஜூலை 17, 2017.
 Comments  
 


Zimbabwe Srilanka test
 

கொழும்பு: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 356, இலங்கை 346 ரன்கள் எடுத்தன. ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 377 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இலங்கை அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில்,  3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. குசல் மெண்டிஸ் (60), மாத்யூஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

டிக்வெல்லா அரை சதம்:

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. கிரீமர் ‘சுழலில்’ மெண்டிஸ் (66), மாத்யூஸ் (25) சிக்கினர். பின், இணைந்த டிக்வெல்லா, ஆஷ்லே குணரத்னே ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் விக்கெட் சரிவை தடுத்து, நிதானமாக ரன் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். டிக்வெல்லா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், குணரத்னே, தில்ருவன் பெரேரா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். முடிவில், இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 391 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குணரத்னே (80), பெரேரா (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

* இதன் மூலம், இலங்கை மண்ணில் அதிகபட்ச ரன்களை ‘சேஸ்’ செய்து சாதனை படைத்தது. இதற்கு முன், பாகிஸ்தான் அணி கடந்த நவ. 2015ல் பல்லேகெலேயில் நடந்த டெஸ்டில் 382 ரன்களை வெற்றிகரமாக ‘சேஸ்’ செய்ததே அதிகமாக இருந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?