Advertisement


முரளி விஜய் விலகல்: தவான் வாய்ப்பு

ஜூலை 17, 2017.
 Comments  
 


Murali Vijay, Sri Lanka Tour, Test Cricket, Dhawan
 

புதுடில்லி: தமிழக வீரர் முரளி விஜய், மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 26ல் காலேயில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் கொழும்பு (ஆக. 3–7), பல்லேகெலேயில் (ஆக. 12–16) நடக்கவுள்ளன. இப்போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த துவக்க வீரர் முரளி விஜய் இடம் பிடித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது (2017, பிப்.,–மார்ச்), வலது கை மணிக்கட்டுப் பகுதியில் காயமடைந்த முரளி விஜய், காயத்தில் இருந்து மீண்டு ‘பேட்டிங்’ பயிற்சி மேற்கொண்டார். அப்போது மணிக்கட்டுப் பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டது. இவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலக வேண்டியதாயிற்று.

தவான் தேர்வு: முரளி விஜய்க்கு பதிலாக மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் தேர்வானார். இதுவரை 23 டெஸ்டில் (1464 ரன்கள்) விளையாடியுள்ள தவான், கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.

இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரகானே (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரோகித் சர்மா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, விரிதிமன் சகா (விக்கெட் கீப்பர்), இ ஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?