Advertisement


அஷ்வினுக்கு முரளிதரன் பாராட்டு

ஜூலை 16, 2017.
 Comments  
 


Ashwin, Cricket, India, Muralitharan, Sri Lankan Cricketer
 

சென்னை: ‘‘இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ‘ஸ்மார்ட்’ கிரிக்கெட் வீரர்,’’ என, இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 30. இதுவரை 49 டெஸ்ட் (275 விக்கெட்), 111 ஒருநாள் (150), 46 சர்வதேச ‘டுவென்டி–20’ (52) போட்டிகளில் விளையாடி உள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், தனது 50வது டெஸ்டில் விளையாட உள்ளார்.

இதுகுறித்து இலங்கை ‘சுழல்’ ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியது: சமீபகாலமாக அஷ்வின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவரது சிறப்பான செயல்பாடு, அடுத்து வரும் தொடர்களிலும் தொடரும் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இவர், ‘ஸ்மார்ட்’ கிரிக்கெட் வீரர்.

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி மீண்டும் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி. கடந்த தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் என்றும் மறக்க முடியாதவை. மீண்டும் சென்னை அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.

இவ்வாறு முரளிதரன் கூறினார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?