Advertisement


எட்டாவது முறையாக பெடரர் சாம்பியன்: விம்பிள்டன் டென்னிசில் ஆதிக்கம்

ஜூலை 16, 2017.
 Comments  
 


Wimbledon Tennis, Federer, Champion, Marin Cilic
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிசில் தனது ஆதிக்கத்தை அழுத்தமாக நிரூபித்த ரோஜர் பெடரர், எட்டாவது முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தார். பைனலில், குரோஷியாவின் மரின் சிலிச்சை மிகச் சுலபமாக வீழ்த்தினார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர்.

புல் தரை களமான விம்பிள்டனில் மன்னனான பெடரர் எதிர்பார்த்தபடியே அசத்தினார். முதல் செட்டை  6–3 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பெடரரின், 35, அனுபவ ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிலிச், 28 திணறினார். இந்த செட்டை பெடரர் 6–1 என வென்றார். தொடர்ந்து அசத்திய இவர், மூன்றாவது செட்டை 6–4 என தன்வசப்படுத்தினார். இடது கால் பாதத்தில் ஏற்பட்ட கொப்பளத்தால் அவதிப்பட்ட சிலிச், முழுத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

5 ஆண்டுகளுக்கு பின்: ஒரு மணி நேரம், 41 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய பெடரர் 6–3, 6–1, 6–4 என்ற நேர் செட்களில் வென்று, 8வது முறையாக கோப்பை வென்றார். தவிர இவர், விம்பிள்டனில் 5 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012ல் கோப்பை வென்றார்.

8வது கோப்பை

பைனலில் அசத்திய பெடரர், விம்பிள்டனில் தனது 8வது (2003–2007, 2009, 2012, 2017) பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்று சாதனை படைத்தார். பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா (7 முறை, 1881–1886, 1889), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (7 முறை, 1993–1995, 1997–2000)  இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

19வது கிராண்ட்ஸ்லாம்

இது, பெடரர் வென்ற 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இவர், ஆஸ்திரேலிய ஓபன் (5 முறை, 2004, 2006–2007, 2010, 2017), பிரெஞ்ச் ஓபன் (ஒரு முறை, 2009), விம்பிள்டன் (8 முறை, 2003-2007, 2009, 2012, 2017), யு.எஸ்., ஓபன் (5 முறை, 2004–2008) தொடர்களில் கோப்பை வென்றுள்ளார்.

இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.  அடுத்த இடத்தில் ஸ்பெயினின் ரபெல் நடால் (15 பட்டம்) உள்ளார்.

35 வயதில் சாம்பியன்

அதிக வயதில் (35) விம்பிள்டனில் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார் பெடரர். இதற்கு முன், 1975ல் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ், தனது 32வது வயதில் கோப்பை வென்றார்

ரூ. 18 கோடி பரிசு

பைனலில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கோப்பையுடன், ரூ. 18 கோடி பரிசு வென்றார். இரண்டாவது இடம் பிடித்த குரோஷியாவின் மரின் சிலிச், ரூ. 9 கோடி பரிசு பெற்றார்.

‘நம்பர்–3’ இடம்

விம்பிள்டனில் கோப்பை வென்ற பெடரர், ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 5வது இடத்தில் இருந்து ‘நம்பர்–3’ இடத்துக்கு முன்னேறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

4வது இடம்

ஒட்டுமொத்தமாக (ஆண்கள், பெண்கள்) அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில், 4வது இடத்தை அமெரிக்க வீராங்கனை ஹெலன் வில்சுடன் பகிர்ந்து கொண்டார் பெடரர். இவர்கள் இருவரும் தலா 19 பட்டம் வென்றுள்ளனர். முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட் (24 பட்டம்), அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (23), ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் (22) ஆகியோர் உள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?