Advertisement


வெஸ்னினா ஜோடி புதிய சாம்பியன்

ஜூலை 16, 2017.
 Comments  
 


Elena Vesnina Ekaterina Makarova
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் ரஷ்யாவின் வெஸ்னினா– மகரோவா ஜோடி முதல் முறையாக  பட்டம் வென்றது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, மகரோவோ ஜோடி, சீன தைபேயின் ஹயோ, ருமேனியாவின் மோனிகா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–0 என எளிதாக கைப்பற்றிய வெஸ்னினா ஜோடி, அடுத்த செட்டையும் 6–0 என வசப்படுத்தியது. 54 நிமிடங்கள் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வெஸ்னினா, மகரோவா ஜோடி 6–0, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. 

முதல் பட்டம்:

இதன் மூலம், விம்பிள்டனில் வெஸ்னினா– மகரோவா ஜோடி முதல் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன், கடந்த 2015ல் நடந்த விம்பிள்டன் பைனலில் இந்தியாவின் சானியா– சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.

* ஒட்டுமொத்தமாக வெஸ்னினா– மகரோவா ஜோடி வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. ஏற்கனவே, பிரெஞ்ச் (2013), யு.எஸ்., ஓபனில் (2014) கோப்பை கைப்பற்றியது. 

லுாகாஸ் ஜோடி சாம்பியன்

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் போலந்தின் லுாகாஸ், பிரேசிலின் மார்செல்லோ ஜோடி 5–7, 7–5, 7–6, 3–6, 13–11 என ஆஸ்திரியாவின் ஆலிவர், குரோஷியாவின் மாட் பாவிக் ஜோடியை போராடி வீழ்த்தியது.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?