Advertisement


விம்பிள்டன்: முகுருஜா முதல் சாம்பியன்

ஜூலை 15, 2017.
 Comments  
 


Wimbledon Tennis, Garbine Muguruza, Venus Williams
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் அரங்கில் முதல் சாம்பியன் பட்டம் வென்றார் கார்பைன் முகுருஜா. பைனலில்,  வீனஸ் வில்லியம்சை வீழ்த்தினார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–11’ அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 15வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா மோதினர். முதல் செட், ஒரு கட்டத்தில் 5–5 என இருந்தது. அப்போது எழுச்சி கண்ட முகுருஜா, வீனஸ் சர்வீசை பிரேக் செய்து, முதல் செட்டை 7–5 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில், 23 வயதான முகுருஜாவின் துடிப்பான ஆட்டத்திற்கு 37 வயதான வீனஸ் வில்லியம்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனையடுத்து இரண்டாவது செட்டை முகுருஜா, 6–0 என வென்றார்.

முதன்முறை: ஒரு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய முகுருஜா 7–5, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தனது முதல் கோப்பையை வென்றார்.

வீனசை பொறுத்தவரை, அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைக்கும் கனவு தகர்ந்தது.

18 கோடி பரிசு

விம்பிள்டன் பைனலில் அசத்திய ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா, சாம்பியன் பட்டத்துடன், ரூ. 18 கோடி பரிசு வென்றார்.

இரண்டாவது

விம்பிள்டனில் கோப்பை வென்ற ஸ்பெயினின் முகுருஜா, தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.

★ விம்பிள்டனில் பட்டம் வென்ற இரண்டாவது ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமை பெற்றார் முகுருஜா. இதற்கு முன், 1994ல் ஸ்பெயினின் கான்சிடா மார்டினஸ் பட்டம் வென்றிருந்தார்.

சாதிப்பாரா பெடரர்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று உலகின் ‘நம்பர்–5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 6வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிக் மோதுகின்றனர். விம்பிள்டனில் 11வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள 35 வயதான பெடரர், இதுவரை 7 முறை கோப்பை வென்றுள்ளார். இன்று வெல்லும் பட்சத்தில் இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் அதிக முறை(8) சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனை படைக்கலாம். தவிர, அதிக வயதில் (35) விம்பிள்டனில் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையும் படைக்கலாம். கடந்த 1975ல் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷே, தனது 32வது வயதில் கோப்பை வென்றிருந்தது சாதனையாக உள்ளது.

தவிர இது, பெடரர் கைப்பற்றிய 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

முதன்முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறியுள்ள மரின் சிலிக், இம்முறை ஸ்பெயினின் பாடிஸ்டா அகுட் (4வது சுற்று), லக்சம்பர்க்கின் கில்லஸ் முல்லர் (காலிறுதி), அமெரிக்காவின் சாம் குயரே (அரையிறுதி) ஆகியோரை வீழ்த்தியுள்ளார். இன்று முழுத்திறமையை வெளிப்படுத்தினால், விம்பிள்டனில் தனது முதல் பட்டம் வெல்லலாம். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் 7 முறை மோதியுள்ளனர். இதில் பெடரர் 6, சிலிக் ஒரு போட்டியில் வென்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?