Advertisement


பைனலில் பெடரர், மரின் சிலிக்: விம்பிள்டனில் மோதல்

ஜூலை 14, 2017.
 Comments  
 


Wimbledon Tennis Final, Federer, Marin Cilic
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரின் சிலிக் மோதுகின்றனர். 

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்–5’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 15வது இடத்தில் உள்ள செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் மோதினர். விம்பிள்டனில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், ‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த முதலிரண்டு செட்களை 7–6, 7–6 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், மூன்றாவது செட்டை 6–4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 18 நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெடரர் 7–6, 7–6, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 11வது முறையாக விம்பிள்டனில் பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக விளையாடிய 10 பைனலில், 7ல் (2003–2007, 2009, 2012) வெற்றி பெற்று கோப்பை வென்றார். மூன்று முறை (2008, 2014, 2015) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

சிலிக் அசத்தல்: மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–6’ குரோஷியாவின் மரின் சிலிக், 28வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமெரிக்காவின் சாம் குயரே மோதினர்.

‘டை–பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை சாம் குயரே 7–6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட மரின் சிலிக், அடுத்த இரண்டு செட்களை 6–4, 7–6 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். தொடர்ந்து அசத்திய இவர், நான்காவது செட்டை 7–5 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 56 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் மரின் சிலிக் 6–7, 6–4, 7–6, 7–5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன், இத்தொடரில் மூன்று முறை (2014–16) காலிறுதி வரை சென்றிருந்தார். தவிர இவர், 2வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு தகுதி பெற்றார். கடந்த 2014ல் யு.எஸ்., ஓபனில் பைனலுக்கு முன்னேறிய இவர், கோப்பை வென்றார். 

இதனையடுத்து பைனலில் பெடரர், மரின் சிலிக் மோதுகின்றனர். ஏ.டி.பி., அரங்கில் இவர்கள் இருவரும் 7 முறை மோதியுள்ளனர். இதில் பெடரர் 6, சிலிக் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

வீனஸ்-முகுருஜா மோதல்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் பைனலில், உலகின் ‘நம்பர்–11’ அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 15வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா மோதுகின்றனர். டபிள்யு.டி.ஏ., அரங்கில் இவர்கள் இருவரும் 4 முறை மோதியுள்ளனர். இதில் வீனஸ் 3, முகுருஜா ஒரு போட்டியில் வென்றனர்.

இன்றைய பைனலில் வீனஸ் வெற்றி பெறும் பட்சத்தில், விம்பிள்டனில் தனது 6வது பட்டத்தை வெல்லலாம். இதற்கு முன் விளையாடிய 8 பைனலில், 5ல் (2000, 2001, 2005, 2007, 2008) வெற்றி பெற்று கோப்பை வென்றார். மூன்றில் (2002, 2003, 2009) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார். தவிர இது, இவரது 8வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

இம்முறை கெர்பர் (ஜெர்மனி), கஸ்னட்சோவா (ரஷ்யா) போன்ற முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி ‘சூப்பர் பார்மில்’ உள்ள முகுருஜா, விம்பிள்டனில் இரண்டாவது முறையாக (2015, 2017) பைனலுக்கு தகுதி பெற்றார். கடந்த 2015ல் நடந்த விம்பிள்டன் பைனலில் செரினாவிடம் கோப்பையை பறிகொடுத்த முகுருஜா, இன்று வீனசை வீழ்த்தும் பட்சத்தில், முதன்முறையாக விம்பிள்டனில் பட்டம் வெல்லலாம்.

போபண்ணா ஜோடி ஏமாற்றம்

கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா ஜோடி 7–6, 4–6, 5–7 என பின்லாந்தின் ஹென்றி கோன்டினன், பிரிட்டனின் ஹீதர் வாட்சன் ஜோடியிடம் தோல்வி அடைந்து ஏமாற்றியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?