Advertisement


சீனிவாசனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஜூலை 14, 2017.
 Comments  
 


Srinivasan, BCCI Meeting, Supreme Court Notice
 

புதுடில்லி: பி.சி.சி.ஐ., சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்றது தொடர்பாக விளக்கம் தருமாறு சீனிவாசன், நிரஞ்சன் ஷாவிற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. 

இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து லோதா குழு சில பரிந்துரைகளை வழங்கியது. இதன் படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாக பொறுப்பில் நீடிக்க முடியாது. இதனால், தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன், முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா தகுதி இழந்து விட்டனர். இவர்கள், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பொதுக்குழு உட்பட பல கூட்டங்களில்  பங்கேற்கக் கூடாது.

இருப்பினும், சமீபத்திய கூட்டங்களில் இவர்கள் பங்கேற்றதால், கோர்ட் நியமித்த கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்குழு (சி.ஒ.சி.,) முடிவுகள் எடுக்க முடியாமல் திணறியது. இப்பிரச்னையை சரி செய்து தருமாறு சி.ஒ.சி.,  சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.

தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய ‘பெஞ்ச்’ முன், நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. இதில்,‘ தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றவர்கள் சார்பில் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. நீங்கள் எந்த அடிப்படையில் பங்கேற்றீர்கள்,’ என, விளக்கம் கேட்டு சீனிவாசன், நிரஞ்சன் ஷாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இவர்கள் பதிலைப் பொருத்து, வரும் 24ம் தேதி இவ்விஷயத்தில் முடிவு எடுக்கப்படும்.

தாகூர் மன்னிப்பு: இதனிடையே சுப்ரீம் கோர்ட்டின் சரியான தகவல் தெரிவிக்காமல் மறைத்த பிரச்னையில், பி.சி.சி.சி., முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை, கோர்ட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இவர் மீதான கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?