Advertisement


மன்னிப்பு கேட்டார் அனுராக் தாகூர்

ஜூலை 13, 2017.
 Comments  
 


Anurag Thakur, BCCI, Indian Cricket
 

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட், லோதா குழு பரிந்துரைகளை வழங்கியது. இதை ஏற்க மறுத்த அப்போதைய தலைவர் அனுராக் தாகூர், 42. அமல்படுத்த தாமதம் செய்தார்.

தவிர, ‘தன்னாட்சி உரிமை பெற்ற பி.சி.சி.ஐ., நிர்வாகத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடக் கூடாது,’ என, கடிதம் தருமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் சஷாங்க் மனோகருக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்த தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்காமல் மறைத்தார். இதனால் கோர்ட் கண்டனத்துக்கு ஆளான, அனுராக் தாகூர் பதவி விலக நேரிட்டது. தவிர, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. பின் தனது நடவடிக்கைக்கு அனுராக் தாகூர் மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த கோர்ட், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டது. 

நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன் விசாரைணக்கு வந்தது. அப்போது, தாகூர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,‘ கோர்ட் நடவடிக்கையை சீர்குலைக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. இவ்விஷயத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,’ என, தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?