Advertisement


விம்பிள்டன்: பைனலில் வீனஸ் – முகுருஜா

ஜூலை 13, 2017.
 Comments  
 


Wimbledon Tennis, Venus Williams, Garbine Muguruza
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மோதுகின்றனர்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா, 87வது இடத்தில் உள்ள சுலோவாகியாவின் மக்டலினா ரிபரிகோவா மோதினர். ஒரு மணி நேரம், 4 நிமிடம் வரை நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய முகுருஜா 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று, பைனலுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முகுருஜா, விம்பிள்டனில் இரண்டாவது முறையாக (2015, 2017) பைனலுக்கு தகுதி பெற்றார். தவிர இது, இவரது மூன்றாவது (2016ல் பிரெஞ்ச் ஓபன், 2015, 2017ல் விம்பிள்டன்) கிராண்டஸ்லாம் பைனல். இதில் 2015ல் நடந்த விம்பிள்டன் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சிடம் வீழ்ந்த முகுருஜா, கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் பைனலில் செரினாவை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

வீனஸ் அபாரம்: மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–7’ பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா, 11வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய வீனஸ், இரண்டாவது செட்டை 6–2 என வென்றார். ஒரு மணி நேரம், 13 நிமிடம் வரை சென்ற போட்டியில் வீனஸ் 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் வீனஸ், விம்பிள்டனில் 9வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றார். முன்னதாக விளையாடிய 8 பைனலில் 5ல் (2000, 2001, 2005, 2007, 2008) வெற்றி பெற்று கோப்பை வென்றார். மூன்றில் (2002, 2003, 2009) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

இதனையடுத்து பைனலில் வீனஸ் வில்லியம்ஸ், முகுருஜா மோதுகின்றனர். டபிள்யு.டி.ஏ., அரங்கில் இவர்கள் இருவரும் 4 முறை மோதியுள்ளனர். இதில் வீனஸ் 3, முகுருஜா ஒரு போட்டியில் வென்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?