Advertisement


விம்பிள்டன்: முர்ரே தோல்வி *அரையிறுதியில் பெடரர்

ஜூலை 12, 2017.
 Comments  
 


Wimbledon tennis murrey federer
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ பிரிட்டனின் ஆன்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’,‘நம்பர்–1’ வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 24வது இடத்திலுள்ள அமெரிக்காவின் சாம் குயர்ரேவை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை 6–3 என, முர்ரே கைப்பற்றினார். பின் நடந்த இரண்டாவது செட்டை குயர்ரே, 6–4 என, வென்றார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற மூன்றாவது செட்டை, முர்ரே 7–6 என, தன் வசப்படுத்தினார்.

இதன் பின் தொடர்ந்து ஏமாற்றத் துவங்கினார். எழுச்சி பெற்ற குயர்ரே 4, 5வது செட்களை 6–1, 6–1 என, தன்பக்கம் கொண்டு சென்றார். முடிவில், முர்ரே 6–3, 4–6, 7–6, 1–6, 1–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

முதன் முறை:

ஆஸ்திரேலிய ஓபன் உட்பட நான்கு கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இதுவரை 41 முறை முயற்சி செய்தும், குயர்ரே ஒரு முறை கூட, அரையிறுதிக்கு முன்னேறியது கிடையாது. தற்போது முதன் முறையாக குயர்ரே கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தார். 

முல்லர்  தோல்வி:

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் நடாலை வீழ்த்திய லக்சம்பர்க்கின் ஜைல்ஸ் முல்லர் , காலிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிக்கை சந்தித்தார். இதில், முல்லர்  6–3, 6–7, 5–7, 7–5, 1–6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார்.

பெடரர் வெற்றி:

மற்றொரு ஒற்றையர் நான்காவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர், கனடாவின் ராவோனிச்சை 6–4, 6–2, 7–6 என்ற நேர் செட்களில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 

 

‘ஜூனியர்’ ஏமாற்றம்

விம்பிள்டன் ஜூனியர் பெண்கள் பிரிவு மூன்றாவது சுற்றில் இந்தியாவின் ஜீல் தேசாய், அமெரிக்காவின் கைலா தேயிடம் 4–6, 4–6 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

* ஜூனியர் பிரிவு ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் பான்தியா, டிராட்டர் (ஜப்பான்) ஜோடி, ஜெல்லர் (அர்ஜென்டினா), யு ஹிசியு (சீன தைபே) ஜோடியிடம் 6–4, 3–6, 7–9 என்ற கணக்கில் வீழ்ந்தது.

 

74 லட்சம் பேர்

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டா, ருமேனியாவின் ஹாலெப்பை வீழ்த்தி, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

தவிர, 1978க்குப் பின் விம்பிள்டன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இந்த போட்டியை உலகம் முழுவதும் 74 லட்சம் பேர் பார்த்தனர். இது விம்பிள்டனில் அதிகம்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?