Advertisement


நடையை கட்டினார் ‘நம்பர்–1’ கெர்பர் * விம்பிள்டனில் அதிர்ச்சி

ஜூலை 10, 2017.
 Comments  
 


Johanna Konta to enter Great British Wimbledon move
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில், பெண்களுக்கான நான்காவது சுற்றில் ‘நம்பர்–1’ வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர், ஸ்பெயினின் முகுருஜாவை(14வது இடம்) சந்தித்தார்.

முதல் செட்டை 6–4 என, கைப்பற்றிய கெர்பர், இதன் பின் ஏமாற்றத் துவங்கினார். வாய்ப்பை பயன்படுத்திய முகுருஜா, இரண்டாவது செட்டை 6–4 என, வென்றார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும் கெர்பர் (4–6) இழந்தார்.

முடிவில், கெர்பர் 6–4, 4–6, 4–6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தார். முகுருஜா இரண்டாவது முறையாக (2015, 2017) காலிறுதிக்குள் நுழைந்தார். 

ஜோகன்னா அபாரம்:

மற்றொரு நான்காவது சுற்றில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டா, 7–6, 4–6, 6–4 என்ற கணக்கில் பிரான்சின் கரோலின் கார்சியாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

கடந்த 1984க்குப் பின், விம்பிள்டன் தொடரில் காலிறுதிக்குள் நுழைந்த, முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

‘நம்பர்–1’ வாய்ப்பு:

பெலாரசின் அசரன்கா, சிமோனா ஹாலெப்பிடம் (ருமேனியா) 6–7, 2–6 என, தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தார். காலிறுதியில் ஹாலெப் வெற்றி பெறும் பட்சத்தில், புதிய ‘நம்பர்–1’ வீராங்கனையாக வலம் வரலாம்.

போலந்தின் ரத்வன்ஸ்கா, 2–6, 4–6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் கஸ்னெட்சோவாவிடம் வீழ்ந்தார். இதேபோல, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் கோகோ வாண்டவேஜிடம் 6–7, 4–6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

மற்ற நான்காவது சுற்று போட்டிகளில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஜெலினா ஆஸ்டபென்கோ (லாட்வியா), ரைபெரிகோவா (சுலோவேகியா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதியில் சிலிக்:

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிக், ஸ்பெயினின் ராபர்ட்டோ படிஸ்டாவை 6–2, 6–2, 6–2 என்ற நேர் செட்களில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?