Advertisement


சானியா ஜோடி முன்னேற்றம்

ஜூலை 09, 2017.
 Comments  
 


sania
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா ஜோடி வெற்றி பெற்றது.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, பெல்ஜியத்தின் கிறிஸ்டின் பிலிப்கின்ஸ் ஜோடி, பிரிட்டனின் நயோமி, ஹீதர் வாட்சன் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அசத்திய சானியா ஜோடி 6–4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 45 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சானியா, கிறிஸ்டின் ஜோடி 6–3, 3–6, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

புரவ் ஜோடி அபாரம்:

கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, குரோஷியாவின் இவான் டோடிச் ஜோடி 7–6, 6–2 என ஜப்பானின் யோசுகி, மகோடா ஜோடியை வீழ்த்தியது.

* இதே பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் புரவ் ராஜா, ஜப்பானின் ஹோசுமி ஜோடி 5–7, 6–4, 6–2 என அமெரிக்காவின் ஜேம்ஸ், செக் குடியரசின் ரெனாட்டா ஜோடியை தோற்கடித்தது. 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?