Advertisement


‘பிபா’ தரவரிசை: இந்தியா ‘96’

ஜூலை 06, 2017.
 Comments  
 


FIFA World Soccer Ranking, India
 

புதுடில்லி: ‘பிபா’ கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 96வது இடத்துக்கு முன்னேறியது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) வெளியிட்டது. இதில் இந்திய அணி, 100வது இடத்தில் இருந்து 96வது இடத்துக்கு முன்னேறியது. இதன்மூலம் தனது 2வது சிறந்த தரவரிசையை பெற்றது. கடந்த 1996ல் (பிப்ரவரி) 94வது இடம் பிடித்திருந்தது சிறந்த தரவரிசையாக உள்ளது. இந்திய அணி, கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் 13ல் வெற்றி கண்டது. தவிர, கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது.

கடந்த 2015ல் (பிப்.,) தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் பதவி ஏற்ற போது இந்திய அணி 171வது இடத்தில் இருந்தது. பின், 2015 மார்ச் மாதம் வெளியான தரவரிசையில் 173வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதன்பின் எழுச்சி கண்ட இந்தியா, கடந்த இரண்டு ஆண்டுகளில் 77 இடங்கள் முன்னேறியுள்ளது.

இதுகுறித்து அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், ‘‘இந்திய கால்பந்து, நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், உலக தரவரிசையில் 173வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 96வது இடத்தில் உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஏ.ஐ.எப்.எப்., நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

ஜெர்மனி ‘நம்பர்-1’: சமீபத்தில் முடிந்த கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி, 3வது இடத்தில் இருந்து ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது. இதனையடுத்து பிரேசில் (2வது இடம்), அர்ஜென்டினா (3வது இடம்) அணிகள் தலா ஒரு இடம் பின்தள்ளப்பட்டன. போர்ச்சுகல் அணி, 4வது இடத்துக்கு முன்னேறியது. 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?