Advertisement


சபாஷ் ஸ்ரீகாந்த்: ஆஸி., ஓபனில் சாம்பியன்

ஜூன் 23, 2017.
 Comments [2]  
 


Australia Open Badminton, Srikanth, Champion
 

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரில் அசத்திய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கோப்பை வென்றார். பைனலில் சீனாவின் சென் லாங்கை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்–11’ வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் லாங்கை (6வது இடம்) சந்தித்தார்.
துவக்கத்திலிருந்தே அசத்திய ஸ்ரீகாந்த் முதல் செட்டை 22–20 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 21–16 என வசப்படுத்தினார். 46 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஸ்ரீகாந்த் 22–20, 21–16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
முதல் முறை
அபாரமாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் முதல் முறையாக சென் லாங்கை வீழ்த்தினார். இதற்கு முன், இருவரும் மோதிய 5 போட்டிகளிலும் சென் லாங்கே வென்றிருந்தார்.
2வது பட்டம்
இந்த ஆண்டில் சூப்பர் சீரிஸ் தொடரில் தொடர்ந்து 2வது பட்டத்தை ஸ்ரீகாந்த் வென்றார். இதற்கு முன், இந்தோனேஷிய ஓபனில் கோப்பை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம், இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
4வது பட்டம்
ஒட்டுமொத்தமாக, சூப்பர் சீரிஸ் அரங்கில் ஸ்ரீகாந்த் வென்ற 4வது பட்டம் இது. ஏற்கனவே, சீனா (2014), இந்தியா (2015), இந்தோனேஷிய ஓபன் (2017, ஜூன் 18) தொடரில் கோப்பை கைப்பற்றி இருந்தார்.
ரூ. 5 லட்சம்
இந்திய பாட்மின்டன் சங்கம் சார்பில் ஸ்ரீகாந்த்திற்கு ரூ. 5 லட்சம் பரிசு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பாராட்டு
வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,‘‘ பட்டம் வென்ற பாட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த்திற்கு எனது பாராட்டுகள். இவரால் தேசமே பெருமையடைந்துள்ளது,’ என்றார்.
* இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின், சேவக் உள்ளிட்டோரும் ஸ்ரீகாந்திற்கு சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பலன் கிடைத்தது
பட்டம் வென்றது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,‘‘ சிட்னி நகரம் வந்தது முதலே, வயிற்றுக்கோளாறால் பாதிக்கப்பட்டேன். உடற்தகுதியை கடைபிடிக்க முடியவில்லை. பைனலில் வெற்றி, தோல்வியை பற்றி எண்ணவில்லை. போட்டியில் விளையாட வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். எனது தாக்குதலான ஆட்டத்திற்கு பலன் கிடைத்தது,’’ என்றார்.
கார் பரிசு
மஹிந்திரா குரூப் நிறுவன சேர்மன் ஆனந்த் மஹிந்திரா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்ரீகாந்த் துடிப்பாக விளையாடினார். பட்டம் வென்ற இவருக்கு ‘டியுவி300’ மாடல் காரை பரிசாக வழங்குகிறேன்,’ என, தெரிவித்துள்ளார்.
செய்னாவுக்குப்பின்....

ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற 2வது இந்திய நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார் ஸ்ரீகாந்த். இதற்கு முன், 2014, 16ல் பெண்கள் ஒற்றையரில் செய்னா கோப்பை வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்


Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?