Advertisement


வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19, 2017.
 Comments [15]  
 


India champions trophy cricket
 

லண்டன்: இப்படி ஒரு ‘மெகா’ தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி உறுதி என தெரியவர,  மூவர்ணக்கொடியை போர்த்தியவாறு அரங்கைவிட்டு முன்னதாகவே கண்ணீர்மல்க கிளம்பினர். இவர்களில் பலர் ரூ. 33 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்.  இந்திய ‘பேட்டிங்’ துவங்கிய வேகத்தில் சரிய, போட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என மனம் நொந்து போயினர். கோஹ்லியின் தவறான முடிவு, பும்ராவின் ’நோ–பால்’ என பைனலில், பல வேதனை தருணங்களை ரசிகர்கள் சந்திக்க நேர்ந்தது. இங்கிலாந்தில், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த நம்மவர்கள், ‘டாஸ்’ வென்று ‘பீல்டிங்’ தேர்வு செய்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு, பகர் ஜமான் (114), அசார் அலி (59), முகமது ஹபீஸ் (59*) கைகொடுக்க, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் (0), கேப்டன் கோஹ்லி (5), தோனி (4) உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹர்திக் பாண்ட்யா (76) ஆறுதல் தந்தார். இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  பாகிஸ்தான் அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

இப்போட்டியில் கேப்டன் கோஹ்லி சில தவறான முடிவுகளை எடுத்தது தோல்விக்கு காரணமாக  அமைந்தது. இந்திய அணியின் பலம் ‘பேட்டிங்’ தான். இந்நிலையில் ‘டாஸ்’ வென்ற கேப்டன் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது தவறு. இப்போட்டியில் ஒருவேளை முதலில் ‘பேட்’ செய்திருந்தால் ரோகித் சர்மா, ஷிகர் தவான் நெருக்கடியின்றி நல்ல துவக்கம் தந்திருப்பர். இதனால் வலுவான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்து, பவுலிங்கில் நெருக்கடி தந்திருக்கலாம்.

* பொதுவாக ஆசிய அணியினர், சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்ப்பர். ஆனால் இந்திய அணி, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா என 2 சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கியது. இவர்கள் வீசிய 18 ஓவர்களில் 137 ரன்கள் எடுக்கப்பட்டன. ஒரு விக்கெட் கூட வீழ்த்தப்படவில்லை.

* சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இம்முறை பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், வெற்றிக்கு வித்திட்டார். இவரை அணியில் சேர்க்காதது தவறு. பாகிஸ்தானின் துவக்க வீரர்களான அசார் அலி, பகர் ஜமான், ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளின் திணறினர். உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தால், இவர்களது விக்கெட்டை விரைவில் கைப்பற்றி இருப்பார்.

* பும்ரா வீசிய ‘நோ–பால்’ காரணமாக 3 ரன்னில் தப்பினார் ஜமான். இதற்கு பின் இவரை வீழ்த்த இந்திய பவுலர்கள் உருப்படியான திட்டம் எதுவும் வகுக்கவில்லை. இதனால் சதம் கடந்து தொல்லை தந்தார்.

* வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதியில் சுழற்பந்துவீச்சில் திருப்பம் தந்த கேதர் ஜாதவுக்கு, பைனலில் முன்கூட்டியே பந்துவீச வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

* வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு, ‘மிடில்–ஓவரில்’ பந்துவீச வாய்ப்பு வழங்கியிருக்கலாம். இதனால் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி நெருக்கடி தந்திருப்பார்.

* முகமது ஆமிர் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தில் ‘அவுட்’ வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் கோஹ்லி, அடுத்த பந்தில் தேவையில்லாமல் ‘ஷாட்’ அடித்து அவுட்டானது தவறு.இது ஆப்–சைடுக்கு வெ ளியே வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வதில் இவருக்கு உள்ள பலவீனத்தை சுட்டிக் காட்டியது.

இது போன்ற தவறுகள் தொடரக் கூடாது. ‘விளையாடு அல்லது வெளியேறு’ என்ற கொள்கையை பி.சி.சி.ஐ., பின்பற்றுவது அவசியம். சோபிக்க தவறும் யுவராஜ், ஜடேஜா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்க வேண்டும். 2019ல் இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு சிறந்த இந்திய அணியை உருவாக்க இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
saravanan 5 hours ago | Report abuse
rohit sharma will be indian captain in 2018


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
saravanan 5 hours ago | Report abuse
suppose if we lost against australia or england in final..thats wont hurt much..but we lost against pakistan..thats hurts a lot...stupid kohli captaincy...all expected dhoni captaincy till champions trophy...but bcci force to resign him.. now bcci happy because of this..


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
saravanan 5 hours ago | Report abuse
no one likes virat captaincy.. he cant win single ipl trophy..he wont win also.. rohit sharma should be indian captain..he also very calm and won 3 ipl trophy and champions league


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
K. Balakrishnan 5 hours ago | Report abuse
Really shocked to see the out coming of finals. Always India won but this time i can't imagine that india is getting all out only for 158 runs. Indian team is tremendous batting line up as well as bowling line up. Surprised to note that Jasprit Bumrah is bowling no ball. When you compare the bowling of ashwin as well as jadeja, jadeja will not allow more runs in his allotted 10 overs but in this final match he has given more runs than ashwin and both the spinners have not taken a single wicket and pakistani batsman are hitting fours and sixes. Bhuvaneswar Kumar has bowled brilliantly in his allotted five overs but he has not given any chance to bowl in the middle of the innings. I am not able to understand what virat kohli is thinking while on the field. Remove Kohli from the captainship. Don't include jadeja and yuvraj instead you include rahane and dinesh karthick as well as suresh raina


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
5   0  
saravanan one day ago | Report abuse
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே. ஒரு நாள் மற்றும் இருவது ஓவர் போட்டிகளுக்கு கோஹ்லி தகுதியான கேப்டன் கிடையாது. இதை இன்னும் சில தொடர்களுக்கு பிறகு அனைவரும் ஒரே கருத்தாக கூறுவார்கள்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
7   0  
selvavinayagam one day ago | Report abuse
இந்தியன் கிரிக்கெட் பிளேயர்ஸ் ஒரு சுயநலவாதிகள். வெற்றியோ தோல்வியோ ஐம்பது ஓவர் வரை நிற்க வேண்டும். இந்தியன் என்ற உணர்வு உண்மையாக இருந்திருந்தால் ரவீந்திர ஜடேஜா உடனே ஓடி பாண்டியா ரன் அவுட் தடுத்து இருக்கலாம். இவனும் விளையாட மாட்டான், விளையாடறவனையும் விளையாட விடமாட்டான்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
3   0  
Pandian M one day ago | Report abuse
ஜாஹிர் கானுக்கு பிறகு இடது கை வேகங்கள் கண்ணுக்கு தெரியலையா? உலகமெங்கும் இடது கை சாதிப்பது மறுக்க முடியுமா?


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   0  
P RAMESHWARAN one day ago | Report abuse
விளையாட்டு வீரர்கள் விளம்பரத்தில் நடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் . ஏனெனில் அவர்கள் பணம் வந்தவுடன் விளையாட்டை மறந்து விடுகின்றனர். மிகவும் அசால்ட்டாக இருக்கின்றனர். இதை ஒரு வியாபாரமாக பயன்படுத்துகின்றனர்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
4   0  
Panchatcharam V one day ago | Report abuse
கண்டிப்பாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். சுழல் பந்து வீரர்களில் ஒருவரை குறைத்து வேகப்பந்து வீச்சில் ஒருவரை சேர்த்திருக்கலாம்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
vpchandrakumar one day ago | Report abuse
பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும்


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
vigneshwar one day ago | Report abuse
பேட் பேட் bad


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
A.George Alphonse one day ago | Report abuse
Tottaly this cricket game is waste and people are wasting their valuable time,energy and money on this game.During match time the school,college going students and the people who are all in working place neglecting their studies and work and concentrating their minds on this game by watching thru their cells.The government also should not give more importance to only cricket but all the games and athletics. By playing such cricket match between our country and other countries the relationship won


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
7   0  
RAMESH RAJA one day ago | Report abuse
இந்தியா தோற்று பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்பது திட்டமிடப்பட்ட ஒன்று. அதைச் சரியாகச் செய்து உள்ளனர் நம் இந்திய அணியினர். அதற்கான பரிசை எப்படிப் பெற்றார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். காரணம் இரண்டாயிரம் கோடிக்கு மேல் இந்தியா வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டிய பந்தயகாரர்களுக்கு யார் பணம் கொடுப்பது. ஆகையால், இந்தியா தோற்று விட்டால் நிறுவனத்திற்கு இரண்டாயிரம் கோடி வருமானம் அதில் சில சதவிதங்கள் இந்திய அணிக்குச் செலவிட்டால் போதும். குற்றம் நடந்தது என்ன? என்று விசாரிக்க வேண்டும்.


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
1   0  
subramanian one day ago | Report abuse
குட் டைம் டு தி பேக் team


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
2   0  
Ramesh Rayen one day ago | Report abuse
வெற்றி அடைந்தால் தூக்கி கொண்டாடுவதும், தோற்றால் துப்புவதும் நம்மக்கு கை வந்த கலை
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?