Advertisement


பதிலடிக்கு இந்திய பெண்கள் ‘ரெடி’ * பாக்., உடன் பலப்பரீட்சை

ஜூன் 19, 2017.
 Comments  
 


women world cup cricket india pakistan
 

லண்டன்: உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, பதிலடி தரும் என நம்பப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில், 11 வது பெண்கள் உலக கோப்பை தொடர் வரும் 24ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் மற்ற அணிகளுடன் லீக் முறையில் மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு (ஜூலை 18, 20) முன்னேறும். பைனல் ஜூலை 23ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. 

இதற்கான இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாக உள்ளார். தவிர, ராஜேஸ்வரி, ஹர்மன்பிரீத் கவுர், ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் கோஸ்வாமி உள்ளிட்டோர் திறமை வெ ளிப்படுத்த காத்திருக்கின்றனர். 

மீண்டும் வாய்ப்பு:

இத்தொடரில் வரும் ஜூலை 2ம் தேதி, இந்திய பெண்கள் அணி, ‘பரம எதிரி’ பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. இத்தொடருக்காக இலங்கையில் நடந்த தகுதிச்சுற்றில், இந்திய அணி (70/3), பாகிஸ்தானை (67/10) வீழ்த்தியது. மீண்டும் அசத்தும் பட்சத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோஹ்லி தலைமையிலான அணி சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம்.

 

பயிற்சியில் ஏமாற்றம்

 நேற்று நடந்த பயிற்சி போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு பூணம் ராத் (33), மிதாலி ராஜ் (21), மேஷ்ரம் (30) மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொதப்ப, 45.1 ஓவரில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 26.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?