Advertisement


கோஹ்லி, தவானுக்கு இடம் * ஐ.சி.சி., லெவன் அணி அறிவிப்பு

ஜூன் 19, 2017.
 Comments  
 


icc dream team india dhawan, kohli
 

 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஐ.சி.சி., கனவு லெவன் அணியில் இந்திய கேப்டன் கோஹ்லி, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமாருக்கு  இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில், 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணி, முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது. பொதுவாக ஐ.சி.சி., தொடர் முடிந்த பின், வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் ‘லெவன்’ அணி தேர்வு செய்யப்படும். இதன்படி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து சார்பில் தலா 3, வங்கதேசம் சார்பில் ஒரு வீரருக்கு இடம் கிடைத்துள்ளது. 12வது வீரராக நியூசிலாந்தின் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அணிக்கு கேப்டனாக பாகிஸ்தானின் சர்பராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தவிர பாகிஸ்தான் சார்பில் ‘பைனல் நாயகன்’ பகர் ஜமான், வேகப்பந்துவீச்சாளர் ஜுனைடு கான், ‘கோல்டன் பால்’ விருது வென்ற ஹசன் அலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் கேப்டன் கோஹ்லி, ‘கோல்டன் பேட்’ விருது வென்ற ஷிகர் தவான், வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேற உதவியாக இருந்த வங்கதேசத்தின் தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட், ஸ்டோக்ஸ், அடில் ரஷித் தேர்வாகினர்.

ஐ.சி.சி., அணி: சர்பராஸ் அகமது (கேப்டன், பாக்.,), ஷிகர் தவான் (இந்தியா), பகர் ஜமான் (பாக்.,), தமிம் இக்பால் (வங்கம்), கோஹ்லி (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அடில் ரஷித் (இங்கிலாந்து), ஜூனைடுகான் (பாக்.,), புவனேஷ்வர் குமார் (இந்தியா), ஹசன் அலி (பாக்.,). 12வது வீரர்: வில்லியம்சன் (நியூசி.,).

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?