Advertisement


ஐ.சி.சி., தரவரிசை: பாகிஸ்தான் ‘நம்பர்–6’

ஜூன் 19, 2017.
 Comments  
 


icc cricket ranking india, pakistan
 

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி, மீண்டும் ‘நம்பர்–3’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, 8வது இடத்தில் இருந்து 95 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது.

பைனல் வரை சென்ற இந்திய அணி, 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இத்தொடரில் லீக் சுற்றோடு திரும்பிய தென் ஆப்ரிக்கா (119 புள்ளி), ஆஸ்திரேலிய (117) அணிகள் முறையே முதலிரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டன.

ரோகித் முன்னேற்றம்:

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, 13வது இடத்தில் இருந்து 10வது இடத்தை சகவீரர் ஷிகர் தவானுடன் பகிர்ந்து கொண்டார். கேப்டன் விராத் கோஹ்லி (865 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் தோனி, 15வது இடத்தில் உள்ளார். அரையிறுதியில் அரைசதம், பைனலில் சதமடித்து அசத்திய பாகிஸ்தானின் பகர் ஜமான், 97வது இடத்துக்கு முன்னேறினார்.

பவுலர்களுக்கான பட்டியலில் ‘டாப்–15’ வரிசையில் ஒரு இந்திய பவுலர் கூட இடம் பெறவில்லை. இந்தியாவின் அக்சர் படேல், 16வது இடத்தில் உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், 19வது இடத்தை வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 24வது இடத்துக்கு முன்னேறினார்.

பாகிஸ்தானின் ஹசன் அலி, 7வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஆமிர் (21வது இடம்), ஜுனைடு கான் (47வது இடம்) நல்ல முன்னேற்றம் கண்டனர்.

 

‘டாப்–10’ அணிகள்

ரேங்க் அணி புள்ளி

1 தென் ஆப்ரிக்கா 119

2 ஆஸ்திரேலியா 117

3 இந்தியா 116

4 இங்கிலாந்து 114

5 நியூசிலாந்து 111

6 பாகிஸ்தான் 95

7 வங்கதேசம் 94

8 இலங்கை 93

9 வெஸ்ட் இண்டீஸ் 77

10 ஆப்கானிஸ்தான் 54


‘டாப்–10’ பேட்ஸ்மேன்கள்:

ரேங்க் வீரர் புள்ளி

1 கோஹ்லி (இந்தியா) 865

2 வார்னர் (ஆஸி.,) 861

3 டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 847

4 ஜோ ரூட் (இங்கி.,) 799

5 பாபர் ஆசம் (பாக்.,) 786

6 வில்லியம்சன் (நியூசி.,) 779

7 குயின்டன் (தெ.ஆ.,) 769

8 டுபிளசி (தெ.ஆ.,) 768

9 கப்டில் (நியூசி.,) 749

10 தவான் (இந்தியா) 742

10 ரோகித் (இந்தியா) 742

 

‘டாப்–5’ பவுலர்கள்

ரேங்க் வீரர் புள்ளி

1 ஹேசல்வுட் (ஆஸி.,) 732

2 இம்ரான் தாகிர் (தெ.ஆ.,) 718

3 ஸ்டார்க் (ஆஸி.,) 701

4 ரபாடா (தெ.ஆ.,) 685

5 நரைன் (வெ.இ.,) 679

* இந்தியா சார்பில் அக்சர் படேல், 16வது இடத்தில் உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?