Advertisement


2018ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடக்குமா

ஜூன் 19, 2017.
 Comments  
 


2018 T20 World Cup, Cricket, ICC
 

லண்டன்: அடுத்த ஆண்டு நடக்க உள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டு, வரும் 2020ல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ஐ.சி.சி., சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 தொடர்கள் நடந்துள்ளன. கடைசியாக, கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்டது. அடுத்த தொடர், அடுத்த ஆண்டு நடக்க இருந்தது. ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான அணிகள், இரண்டு அணிகள் பங்கேற்கும் தொடர்களில் விளையாட இருப்பதால், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரும்பாலான அணிகள், இரண்டு அணிகள் பங்கேற்கும் தொடர்களில் (‘பைலேட்ரல் சீரிஸ்’) விளையாட இருப்பதால், அடுத்த ஆண்டு ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம். எனவே வரும் 2020ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர இத்தொடர், தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவில் நடத்தப்படலாம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?