Advertisement


கால்பந்து: இந்தியா அசத்தல் வெற்றி

ஜூன் 13, 2017.
 Comments  
 


AFC Asian Cup 2019 INDIA BEAT Kyrgyzstan
 

 

பெங்களூரு: ஆசிய கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி, 1–0 என்ற கோல் கணக்கில் வலிமையான கிர்கிஸ்தானை வீழ்த்தியது.

வரும் 2019ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் (ஜன.5– பிப். 1)  ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான மூன்றாவது சுற்று தகுதி போட்டியில், ‘ஏ’ பிரிவில் இந்திய அணி, கிர்கிஸ்தான், மக்காவு, மியான்மர் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் மியான்மரை வென்ற இந்திய அணி (1–0),  பெங்களூருவில் நடந்த இரண்டாவது போட்டியில், நேற்று கிர்கிஸ்தானை எதிர்கொண்டது. 

இந்திய அணிக்கு சுனில் செத்ரி கேப்டன் பொறுப்பேற்றார். உலகத் தரவரிசையில் 132 வது இடத்தில் இருந்தாலும், வலுவான கிர்கிஸ்தானை, சொந்த மண்ணில் சாய்த்து விட இந்தியா (100 வது இடம்) போராடியது. 

23, 26 வது நிமிடங்களில் இந்திய அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பு வீணானது. 36வது நிமிடம் ஜீஜே (இந்தியா) அடித்த பந்து, கோல் கீப்பர் பாவெல் மீது பட்டுத் திரும்ப, முதல் பாதி கோல் எதுவுமின்றி (0–0) முடிந்தது.

56வது நிமிடத்தில் சுனில் செத்ரி அடித்த பந்து, கோல் போஸ்டுக்கு மேலாக சென்றது. 69வது நிமிடம் ஜீஜே கொடுத்த பந்தை பெற்ற சுனில் செத்ரி, ‘சூப்பர்’ கோல் அடிக்க, இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி தர கிர்கிஸ்தான் வீரர்கள் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் கிடைத்த எளிதான வாய்ப்புகளை ராபின் சிங், சுனில் செத்ரி வீணடித்தனர்.

முடிவில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சர்வதேச அரங்கில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 8வது வெற்றி இது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?