Advertisement


ரேங்கிங்: நடால் ‘நம்பர்–2’

ஜூன் 12, 2017.
 Comments  
 


french open tennis ranking nadal
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் 10வது முறையாக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஏ.டி.பி., தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கான தரவரிசை(ரேங்கிங்) பட்டியலை, ஏ.டி.பி., வெளியிட்டது. இதன் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் 10வது முறையாக கோப்பை வென்று சாதித்தார்.

முதலிடத்தை பிரிட்டனின் ஆன்டி முர்ரே தக்கவைத்துக் கொண்டார். பிரெஞ்ச் ஓபன் பைனல் வரை முன்னேறிய சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 4வது இடத்தில் நீடிக்கிறார். காலிறுதியில் தோல்வி அடைந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், 5வது இடத்தில் தொடர்கிறார்.

போபண்ணா பின்னடைவு:

பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் கோப்பை வென்ற இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆண்கள் இரட்டையரில் 3வது சுற்றோடு திரும்பினார். இதனால் ஏ.டி.பி., இரட்டையர் பிரிவு தரவரிசையில், 22வது இடத்தில் இருந்து 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான புரவ் ராஜா, தவிஜ் சரண் 59வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சீனியர் வீரர் லியாண்டர் பயஸ், 63வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஹாலெப் ‘நம்பர்–2’:

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 4வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்றார். முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, 47வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தை ஜெர்மனியின் கெர்பர், தக்கவைத்துக் கொண்டார். 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?