Advertisement


பிரெஞ்ச் ஓபன்: நடால் 10வது முறையாக சாம்பியன்

ஜூன் 11, 2017.
 Comments  
 


Nadal, French Open Tennis, Spain, Wawrinka
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 10வது முறையாக கோப்பை வென்று சாதித்தார். பைனலில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்காவை எளிதாக தோற்கடித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–3’ சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர்.

துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நடால், முதல் செட்டை 6–2 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், இரண்டாவது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார். மூன்றாவது செட்டிலும் அபாரமாக ஆடிய நடால் 6–1 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 5 நிமிடம் வரை நீடித்த போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால் 6–2, 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 10வது முறையாக (2005–08, 2010–14, 2017) கோப்பை வென்றார்.

புதிய சாதனை:

இதன்மூலம் நடால், குறிப்பிட்ட ஒரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் 10 முறை கோப்பை வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். தவிர இந்த இலக்கை எட்டிய 2வது டென்னிஸ் நட்சத்திரமானார். ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட், 11 முறை கோப்பை வென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த மான்டி–கார்லோ, பார்சிலோனா ஓபன் தொடர்களில் நடால், தனது 10வது பட்டம் வென்றார்.

15வது பட்டம்:

இது, நடால் கைப்பற்றிய 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதுவரை இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 1 (2009), பிரெஞ்ச் ஓபனில் 10 (2005–08, 2010–14, 2017), விம்பிள்டனில் 2 (2008, 2010), யு.எஸ்., ஓபனில் 2 (2010, 2013) என 15 பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் அமெரிக்காவின் பீட் சாம்பிராசை (14 பட்டம்) முந்தி 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (18 முறை) உள்ளார்.

ரூ. 15 கோடி பரிசு

பிரெஞ்ச் ஓபன் பைனலில் வெற்றி பெற்ற நடாலுக்கு, சாம்பியன் கோப்பையுடன், ரூ. 15 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த வாவ்ரின்கா, ரூ. 7.6 கோடி பரிசு வென்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?