Advertisement


கோவை தினமலர் அணி சாம்பியன்

ஜூன் 10, 2017.
 Comments  
 


dinamalar team
 

கோவை: கோவையில் நடந்த அனைத்து ‘மீடியா’ ‘டி–20’ கிரிக்கெட் போட்டியில், தினமலர் நாளிதழ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில், 19 ரன்கள் வித்தியாசத்தில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அணியை வென்றது.

கோவை குனியமுத்துார் கிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மாவட்ட அளவில் அனைத்து ‘மீடியா’ கிரிக்கெட் போட்டி நடந்தது. மாவட்ட அளவில் 9 அணிகளை, ஏ, பி என இரு குழுக்களாக பிரித்து, ஏ–குழுவில் தினமலர், டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து, ஹலோ எப்.எம்., அணிகளும்; பி–குழுவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், சூர்யன் எப்.எம்., டெக்கான் க்ரானிக்கல், மீடியா லெவன் ஆகிய அணிகளும், ‘லீக்’ முறை போட்டியில் பங்கேற்றன.

அரை இறுதியில் ஏ–குழுவில் முதலிடம் பெற்ற தினமலர் அணி–பி–குழுவில், 2வது இடம் பெற்ற தினகரன் அணியை வென்றது. மற்றொரு அரைஇறுதியில் ஏ–குழுவில், 2வது இடம் பெற்ற டைம்ஸ் அணி, பி–குழுவில் முதலிடம் பெற்ற, எக்ஸ்பிரஸ் அணியை வென்றது.

தினமலர் அணி அபாரம்:

இதன் இறுதி போட்டியில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த தினமலர் அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு, 106 ரன்கள் எடுத்தது. தினமலர் அணியின் சத்தியராஜ்–27, செந்தில், சங்கரசுப்பிரமணியன், ஹிட்லர் தலா 14 ரன்களும் எடுத்தனர். டைம்ஸ் ஆப் இந்தியா அணி அர்ஜுன், சந்தீப்சிங் தலா, 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அடுத்து பேட்செய்த டைம்ஸ் ஆப் இந்தியா 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை சந்தித்தது. டைம்ஸ் ஆப் இந்தியா பாலு–19, அர்ஜுன், ரவி தலா 13 ரன்கள் எடுத்தனர். தினமலர் அணி செந்தில்–4, சதீஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆட்டநாயகன், தொடர் நாயகனாக, தினமலர் அணியைச் சேர்ந்த செந்தில், பாலமுருகன் முறையே தேர்வு பெற்றனர்.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், எக்ஸ்பிரஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தினகரன் அணியை வென்றது.

கோப்பை வென்ற தினமலர் அணியினரை, தினமலர் நாளிதழ் வர்த்தக இயக்குனர் எல். ஆதிமூலம் பாராட்டினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?