Advertisement


பைனலில் வாவ்ரின்கா– நடால் மோதல்

ஜூன் 09, 2017.
 Comments  
 


Wawrinka
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில்  வாவ்ரின்கா,  நடால் மோதவுள்ளனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த  ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்காவை (3வது இடம்) சந்தித்தார். துவக்கம் முதலே இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். 

முதல் செட்டை 6–7 என இழந்த வாவ்ரின்கா, அடுத்த செட்டை 6–3 என கைப்பற்றி பதிலடி தந்தார். மூன்றாவது செட்டை 5–7 என பறிகொடுத்த வாவ்ரின்கா, மீண்டும் நான்காவது செட்டை 7–6 என வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய இவர் 6–1 என கைப்பற்றினார். நான்கு மணி நேரம் 34 நிமிடம் நீடித்த போராட்டத்திற்குப்பின், வாவ்ரின்கா 6–7, 6–3, 5–7, 7–6, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். 

* இதன் மூலம், பிரெஞ்ச் ஓபனில் 44 ஆண்டுக்குப்பின், பைனலுக்கு முன்னேறிய மூத்த வீரர் (32 ஆண்டு, 75 நாள்) என்ற பெருமை பெற்றார். 1973ல் குரோஷியாவின் நிகி பிலிக் 33 வயதில் பைனலில் விளையாடினார்.

நடால் முன்னேற்றம்:

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை எதிர் கொண்டார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6–3, 6–4, 6–0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு 10வது முறையாக முன்னேறினார். 

பைனலில் வாவ்ரின்கா– நடால் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். 

 

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?